தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா சிலருடன் சேர்ந்து புதுதில்லியில் மதுபான வியாபாரத்தை எளிதாக்குவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் விஜய் நாயருக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் அமலாக்க இயக்குனரகம் தனது குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டியுள்ளது.
100 கோடி லஞ்சம்
டெல்லி அரசால் புதிய கலால் வரிக் கொள்கை கொண்டு வரப்பட்ட பிறகு, கவிதாவும் மற்றும் சிலரும் டெல்லியில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டதாக நிதி விசாரணை நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. "தோராயமாக 100 கோடி ரூபாய் பணத்தை கே. கவிதா, ராகவ் மகுண்டா, எஸ்.எம்.எஸ். ரெட்டி மற்றும் சரத் ரெட்டி ஆகியோர் விஜய் நாயருக்கு, கொடுத்து ஆதரவைப் பெற்றுள்ளனர்", என்று ED குற்றப்பத்திரிகை கூறுகிறது. ஆம் ஆத்மியின் விஜய் நாயர், தொழிலதிபர் சமீர் மகேந்திரு மற்றும் தெலுங்கானா குழுவினரான கே.கவிதா உள்ளிட்டோர் இணைந்து சதித்திட்டம் முழுவதையும் மேற்கொண்டதாக ஏஜென்சி குற்றம்சாட்டியுள்ளது.
இண்டோ ஸ்பீரிட்ஸ் நிறுவனம்
"இண்டோ ஸ்பீரிட்ஸ் நிறுவனம் மேலும், அருண் பிள்ளை, கே.கவிதா, ராகவ் மகுண்டா, எஸ்எம்எஸ் ரெட்டி, அபிஷேக் போயின்பள்ளி, புச்சி பாபு போன்ற பிற நபர்களுடன் சமீர் மகேந்துரு சதி செய்வதற்காக லஞ்சம் சுமார் ரூ.100 கோடி விஜய் நாயர் மூலம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டது. அருண், அபிஷேக் மற்றும் புச்சி பாபு ஆகியோர் டெல்லியில் ஷரத் ரெட்டி, எஸ்எம்எஸ் மற்றும் கே.கவிதா சார்பாக பணியாற்றினர்” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
65 சதவிகித பங்கு
சமீர் மகேந்திருவின் நிறுவனமான இண்டோ ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். ரெட்டியுடன் சேர்ந்து கவிதாவுக்கும், அவரது கூட்டாளி அருண்பிள்ளை மூலமாக 65 சதவீத பங்குகள் இருந்ததாக ஏஜென்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி அரசாங்கத்தால் புதிய கலால் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் டெல்லியின் முக்கிய வணிக நிறுவனங்களில் இண்டோ ஸ்பிரிட்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.
காணொலி சந்திப்புகள்
“இந்தோ ஸ்பிரிட்ஸில் 65% பங்குகள் சமீர் மஹந்த்ருவால் வழங்கப்பட்டதாக அருண் பிள்ளை வெளிப்படுத்தினார். அருண்பிள்ளை மேலும், சமீர் மஹந்த்ருவுடனான அவரது கூட்டாளிகளின் தொடர்புகளின் போது, அவரது வணிகத்தில் 65% பங்குகள் எம்.எஸ். ரெட்டி மற்றும் கே.கவிதாவிடம் இருந்தது என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தினார் என்று குற்றப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிதாவின் மதுபான வியாபாரம் தொடர்பாக பல தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சில சந்திப்புகள் அவரது ஹைதராபாத் இல்லத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. “அருண் பிள்ளை, கவிதா மற்றும் சமீர் மஹந்த்ருவுடன் காணொலி அழைப்புகளை ஏற்பாடு செய்திருந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமீர் மஹந்த்ரு மற்றும் கவிதா ஆகியோரின் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார், அதில் அவர் சமீர் மகேந்திருவிடமிருந்து இந்தோ ஸ்பிரிட்ஸ் வணிகத்தைப் பற்றிய பொதுவான அப்டேட்டுகளை பெற்றார்” என்று ED குற்றம் சாட்டியுள்ளது.