உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. வன்கொடுமை செய்தவரின் மனைவி இந்தச் செயலை படம்பிடித்து பின்னர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


 






இதுகுறித்து சிறுமியின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


குற்றம்சாட்டப்பட்ட தம்பதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஃபைஸ்கஞ்ச் பெஹ்டா காவல் நிலைய பொறுப்பாளர் சரண் சிங் ராணா தெரிவித்தார்.


ஜூலை 12 ஆம் தேதி தனது கிராமத்தைச் சேர்ந்த நபர் தன்னை தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவரது மனைவி தனது மொபைல் போனில் இதை பதிவு செய்ததாகவும் சிறுமி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த தம்பதியினர் மிரட்டியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


 






குற்றம் சாட்டப்பட்ட மனைவி சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை வைரலாக்கியபோது சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.


சிறுமியை கணவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக அதை மனைவியே படம் பிடித்திருப்பது உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண