சிம்லா அருகே தவறான பதில்களைச் சொன்னதற்காக ஒரு மாணவியை வைத்து மற்றொரு மாணவியை அறைய சொன்னதற்காக அரசு பெண்கள் பள்ளியின் பெண் ஆசிரியை ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Continues below advertisement

காவல்நிலையத்தில் 10 வயது மாணவி புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், “திங்கள் கிழமை மதியம் பள்ளியில் ஆசிரியை சமஸ்கிருத பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாடத்தின் சில பகுதிகளை மனப்பாடம் செய்ய சொன்னார். 

பின்னர், வகுப்பில் சமஸ்கிருத வார்த்தைகளை மனப்பாடம் செய்யச் சொன்னதன் அர்த்தங்கள் குறித்து ஆசிரியை கேள்வி எழுப்பினார். 

Continues below advertisement

வகுப்பு தலைவரான நான் சரியான பதிலை சொன்னேன். மேலும் சிலரும் சரியான பதிலை சொன்னார்கள். ஆனால் சிலருக்கு பதில் தெரியவில்லை. 

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவர்கள் அனைவரையும் அறையுமாறு என்னிடமும் சரியான பதில் சொன்னவர்களிடமும் கூறினார். இதையடுத்து ஆசிரியை சொன்னதை நாங்கள் செய்தோம். ஆனால் வகுப்பு தோழிகளை மெதுவாகத்தான் கன்னத்தில் அறைந்தோம். 

ஆசிரியரின் செயல் என்னை பயமுறுத்தியது. எனவே அவர் சொல்வதை செய்தேன். ‘உங்கள் பெற்றோரிடம் வேண்டுமானால் போய் சொல்லுங்கள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என ஆசிரியர் அடிக்கடி கூறுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தான் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 வயது மாணவியின் புகாரின் அடிப்படையில், பிரிவு 115 (2) தானாக முன்வந்து காயப்படுத்துதல், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015 இன் பிரிவு 75 குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் பள்ளியிலும் ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.