இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை (பிப்ரவரி 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

Continues below advertisement

பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) மற்றும் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range): தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 25 kWh மற்றும் 35 kWh ஆகியவை ஆகும். இதில், 25 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 265 கிலோ மீட்டர்கள் ஆகவும், 35 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 365 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிரைவிங் ரேஞ்ச் ஆகும்.

Continues below advertisement

இந்த பேட்டரி ஆப்ஷன்கள், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாக ஒரு பேட்டரி ஆப்ஷனையும், பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல், ஒரு முறை மட்டும் செய்யப்பட்ட சார்ஜ் மூலமாக சுமார் 600 கிலோ மீட்டர்கள் ஓடி அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. இது கிட்டத்தட்ட சென்னை-திருநெல்வேலி இடையேயான தொலைவு ஆகும். ஆனால் அதன் பேட்டரி ஆப்ஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ள டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரில் 45 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அனேகமாக இந்த பேட்டரி ஆப்ஷன், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகள் (Features): டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், குரல் மூலம் கட்டுப்படுத்த கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற வசதிகளை எல்லாம் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு வசதிகள் (Safety Features): டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக் வழங்கப்படலாம். தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests) முழுமையாக 5  5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.