1. ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டன.






 


 


2.இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மாட்ஹான் பொது இடத்தில் உதவியாளருக்கு முத்தம் கொடுத்து, கொரோனா தடுப்பு விதிகளை மீறியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 






3. புதிய அப்டேட்டாக குரூப் வீடியோ கால் பேசும் வசதியை டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளது.கிட்டத்தட்ட செயலி அறிமுகமாகி ஒரு வருடத்திற்கு பிறகு இந்த அப்டேட் வந்துள்ளது. செல்போன், டேப்லட், டெஸ்க்டாப் என அனைத்து ட்வைஸ்களிலும் இந்த வசதியை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.






 


4. ஆச்சரியமான விசயம் என்னவென்றால், எந்த ஊரில் எலுமிச்சை பழமும், ஐஸ்கிரீமும் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தாரோ, அதே ஊரில் இன்று காவல் துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஒரு பெண் எஸ்.ஐ.,






 


5. கான்பூரில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், தனது பால்கயகால நண்பரை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்ததோடு, அவரது 51-வது திருமண நாளினை முன்னிட்டு கேக் வாங்கிச்சென்று கொண்டாடியுள்ள சம்பவம் நண்பரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






 


6. உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செய்தியார்கள் சந்திப்பில் பேசிய அவர், "டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் அதிகமாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது. தற்போது, உலகளவில், 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 


 






7. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜே ஷா அறிவித்துள்ளார். மேலும் டி-20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும்  அட்டவணையை ஐசிசி வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.






 


8. 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு பயணிகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


 






9. கேரளா, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சமீபத்தில் காங்கிரஸ் மேலிட தலைமை மாற்றியுள்ள நிலையில் தமிழகத்திலும் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 






10. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 804 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,804ஆக அதிகரித்துள்ளது.