இன்றைய நாளில் காலையில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளின் தலைப்பு செய்திகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சுருக்கமாகவும் தெளிவாகவும் அவற்றை நீங்கள் அறியலாம்.
1. வரும் 24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
2. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில், இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர் .
3. ’கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த எத்தனையோ வேலைகள் செய்தோம் இருந்தும் பல உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம்’ எனக் கண்கலங்கியபடி பேசியுள்ளார் பிரதமர் மோடி. தனது தொகுதியான வாரணாசியின் மருத்துவப் பணியாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இவ்வாறு பேசியுள்ளார்.
4. தமிழகத்தில் நேற்று ஒரே நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 36 ஆயிரத்து 184 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது. இதனால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது.
5. கர்நாடக மாநிலத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
6. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
7. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
8. இஸ்ரேல் - காஸா இடையே 11 நாட்களாக நடைபெற்று வந்த போர் நிறுத்தப்பட்டது. காஸாவில் மக்கள் கொண்டாட்டம்.
9. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க. அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது மாநில உரிமையை பறிகொடுக்கும் செயல் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
10. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
11. சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியது. மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
12. உலகில் 16.64 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34.56 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 14.72 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 28,582 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 648 பேர் உயிரிழப்பு. பிரேசிலில் ஒரேநாளில் 77,598 பேர் பாதிப்பு; 2,186 பேர் உயிரிழப்பு. மொத்த பாதிப்பு 1.59 கோடி; மொத்த உயிரிழப்பு 4.46 லட்சம்.
இது போன்ற அனைத்து தரப்பு செய்திகளும் உங்கள் விரலநுனியில் வந்து சேர தொடர்ந்து இணைந்திருங்கள் www.abpnadu.com . இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக ஏபிபி நாடு செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.