காசி தமிழ் சங்கமம் தந்த ஆர்வம்: 32 மணி நேரத்தில் 1857 கி.மீ பைக்கில் பயணம் செய்த தமிழகத் தம்பதி

காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்திய தாக்கத்தால் வெறும் 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் மோட்டார் பைக்கில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தம்பதி காசி சென்றுள்ளனர்.

Continues below advertisement

காசி தமிழ் சங்கமம்:

Continues below advertisement

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒருமாதம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி பேச்சு:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தார். அதில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, பழம்பெரும் மொழியான தமிழைக் காக்க வேண்டிய கடமை, இந்திய மக்கள் அனைவருக்கும் இருக்கிறது என பேசினார்.

காசி சென்ற தமிழக தம்பதி:

அதைதொடர்ந்து, டிசம்பர் 16ம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த விழாவில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்து தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்த ராமலட்சுமி- ராஜன் தம்பதியர்  சாதனை படைத்துள்ளனர்.  கடந்த ஓராண்டாக இருசக்கர மோட்டார் வாகனத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர்கள்,  அதன் ஒரு பகுதியாக நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இதனிடையே,  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ள காசி தமிழ் சங்கமத்தைக் காணும் ஆர்வத்துடன் ஓசூரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.  ஓசூரில் இருந்து பயணத்தை தொடங்கி,  இடையில் உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் செலவிட்ட  நேரத்தையும் சேர்த்து, 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காசிக்கு வந்து சேர்ந்ததாக ரமாலட்சுமி- ராஜன்  தம்பதியர் தெரிவித்தனர். இந்தப் பயணம் தங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் என்றும் சாதனைப் புத்தகத்தில் பதிவதற்காக அல்ல என்றும் ரமாலட்சுமி தெரிவித்துள்ளார்.

காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றி தமிழ்நாட்டில் இருக்கும்போது கூட தங்களால் இவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி  அளிப்பதாகவும், ரமாலட்சுமி- ராஜன்  தம்பதியினர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்

Continues below advertisement
Sponsored Links by Taboola