துபாயில்  சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் தமிழ்நாடு திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார்.


பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை தி.மு.க.வின் எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வாசலுக்கே சென்று வரவேற்றனர். மேலும், தி.மு.க. எம்.பி.க்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.




அதன்பிறகு, நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்குள்ள ஒரு அரசு மாதிரி பள்ளிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, டெல்லியை போன்று தமிழ்நாட்டிலும் அனைத்து அரசு பள்ளிகளையும் முன்மாதிரி பள்ளிகளாக கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும் என்று தெரிவித்தார். 






இந்தநிலையில், டெல்லி நேரு பூங்காவில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் முதலமைச்சரை ஆர்வமுடன் சந்தித்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.






அதேபோல், டெல்லியில் தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி டிசம்பரில் இந்த கட்டடம் செட்டிநாடு முறையில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண