Breaking News LIVE Today: மாஃபியா மற்றும் குண்டர்களுக்கு எதிரான கட்டுப்பாடு என்றால், அதன்பெயர் உபி பாஜக ஆட்சி - பிரதமர் மோடி
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்
கோவையில் கிறிஸ்துவ வாக்காளர்களை கவர சிலுவையுடன் கூடிய ஜெபமாலை கொடுத்த பாஜக வேட்பாளர்
இந்தியாவில் ஹிஜாப் அணிய அவசியமில்லை - சர்ச்சையை கிளப்பும் போபால் எம்.பி சாத்வி ப்ரக்யா
திமுகவின் சாதனைகள் இந்தியாவுக்கு வழிகாட்டப் போகிறது - இணையவழி பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
நான் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் சுயசரிதை நூலின் முதல் பாகம் இம்மாத இறுதியில் வெளியாகும் - முதலமைச்சர் ஸ்டாலின்
மார்ச் 6 வரை, காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
சென்னை புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். 45-வது சென்னை புத்தக காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மோடி வெற்றி பெறுவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. உரிய காலத்துக்குள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென்றால், ராஜினாமா செய்வார்கள் - கமல்ஹாசன்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு. 40 கிமீ வேகத்துக்கு மேல் வாகனத்தை ஓட்டக்கூடாது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 5 சவரனுக்குக் குறைவான நகைகளை தேர்தல் முடிந்து பிப்ரவரி 25-ஆம் தேதி பெறலாம்
நேற்று விழுப்புரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலையில் 2 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னை மாநகராட்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திண்டுக்கல் மாநகராட்சி முதல் வார்டு அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி திமுகவில் இணைந்தார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு மாற்றியமைப்பு.
முன்னாள் கூட்டறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 50,000 ரூபாய் கைப்பற்றியுள்ளனர். பொது மக்களுக்கு பரிசுகள் வழங்கு முயன்றதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பனுக்கு நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் மரணம்
இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராமிற்கு 31 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,665-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 248 ரூபாய் அதிகரித்து 37,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 4,27,23,558 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5.09.872 ஆக உயர்ந்துள்ளது
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹ்ரி (69), உடல்நல குறைவால் மும்பை மருத்துவமனையில் இன்று காலமானார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் மழலையர் பள்ளிகள் இன்று திறப்பு; 2 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது. தியேட்டர்கள் இன்று முதல் 100சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Background
- கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுபாடுகள் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கபப்டுகிறது. தியேட்டர்கள் இன்று முதல் 100சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- விறுவிறுவென நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது
- உக்ரைன் போர் பதற்றம் சூழலால் இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து யாரும் தற்போது உக்ரைன் செல்ல வேண்டாமென உத்தரவு
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இத்தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இன்னும் பல முக்கியச் செய்திகள், தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -