Breaking News LIVE Today: ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை - அதிபர் விளாடிமிர் புதின்

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 15 Feb 2022 09:41 PM
ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை - அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்யா நிச்சயமாக போரை விரும்பவில்லை என்று மாஸ்கோவில் உக்ரைன் விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதில் அளித்துள்ளார்.

ஆக்கிரப்புகளை வரன்முறைப்படுத்துவதை ஏற்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

ஆக்கிரப்புகளை வரன்முறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்று ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளே மழைக்கால வெள்ளத்திற்கும், கோடைக்கால பஞ்சத்திற்கும் காரணம் என்றும், நில மாஃபியாக்கள் ஆக்கிரமிப்புகளில் ஏழைகளை குடியமர்த்தி அரசிடம் வரன்முறை செய்கின்றன என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

திம்பம் மலைபாதையில் போக்குவரத்து தடை தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம் 

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற முடியாது.
திம்பம் மலைபாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு விடிக்கப்பட்ட தடை தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம் 

ஒரு நாள் ஆட்சி மாறும் , காட்சிகள் மாறும் - ஈபிஎஸ்

பாஜகாவிற்கு அதிமுக டப்பிங் பேசுகிறது என்கிறார்கள் ஆனால் நாங்கள் தனித்து தான் போட்டியிடுகிறோம். காவல் துறையினர் நேர்மையாக இருக்க வேண்டும் . ஒரு நாள் ஆட்சி மாறும் , காட்சிகள் மாறும் என எதிர்கட்சித்தலைவர் ஈபிஎஸ் கூறினார் 

உள்ளாட்சி தேர்தல் வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்விற்கு மாற்றம் 

நிஃப்டி 509 புள்ளிகள் உயர்வு

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 509 புள்ளிகள் அதிகரித்து  17352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு 

சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 1736 புள்ளிகள் உயர்ந்து 58412 புள்ளிகள் ஆனது  

தனித்து போட்டியிட முடியாத கட்சி திமுக - ஈபிஎஸ்

கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியாத கட்சி திமுக என எதிர்கட்சி தலைவர் ஈபிஎஸ் விமர்சனம் 

ஏறுமுகத்தில் தங்க விலை

தங்கம் ஒரு சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து , ஒரு கிராம் 4696 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37568 ரூபாய்க்கும் விற்பனை

ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிகார் முதல்வர்

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் வெடித்து வந்த நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது : தனி மனித நம்பிகைக்கும் கலாச்சாரத்துக்கும் எதிரான கருத்துகளை ஒருபோதும் தெரிவிக்கமாட்டோம் 

வன்னியர் உள்ஒதுக்கீடு நாளை ஒத்திவைப்பு

10.5 % வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்திற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு நாளை ஒத்திவைப்பு 

காங்கிரஸில் இருந்து விலகிய அஸ்வினி குமார்

தான் காங்கிரஸிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய அஸ்வினி குமார் 

உக்ரையின் எல்லையில் படைகளை குறைத்துவரும் ரஷ்யா 

ரஷ்யா ராணுவ வீரர்கள் சிலர் ராணுவ முகாமிற்கு திரும்பியதால் உக்ரையின் எல்லையில் நிலவிவந்த பதற்றமான சூழல் குறைந்து வருகிறது 

ரஷ்யாவின் மீது கண்டனம்  தெரிவித்த G7நாடுகள் 

உக்ரையின் நாட்டின் இறையாண்மையை எந்த விதத்திலும் பாதிக்காதவகையில் காப்பதாக  G7நாடுகள் உறுதி . 

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்த 33 மாணவிகள் வெளியேற்றம் 

குடகு மாவட்டத்தில் 20 மாணவிகளும் ஷிமோகாவில் 13 மாணவிகளும் ஹிஜாப் 
அணிந்ததால் வெளியேற்றபட்டனர் 

மத்திய பிரதேச முதல்வருக்கு கொரோனா

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தன்னை தனிமைபடித்தி கொண்டுள்ளார்

 வினாத்தாள் லீக் குறித்து பள்ளிகல்வித்துறை விளக்கம் 

பொதுத்தேர்வுக்கான பயிற்சியாகதான் திருப்புதல் தேர்வு நடத்துகிறோம் , திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள்
கணக்கில் எடுத்துகொள்ளபடாது என பள்ளிகல்வித்துறை விளக்கம் 

முதலில் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் - ஓபிஎஸ்

கோரிக்கைகளை நிறைவேற்றிய பின் முதல்வர் அகில இந்திய அரசியலில் 
இறங்கட்டும். எதிர்கட்சி கூட்டம் தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதில் 
அளித்த ஓபிஎஸ்

சட்டவிரோத பட்டாசு தயாரிப்பால் நடவடிக்கை எடுக்கும் எஸ்.பி

உசிலம்பட்டி அருகே வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பின்போது ஒருவர் பலி 
அதனையடுத்து எஸ்.பி பாஸ்கரன் பேட்டி 

நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல - பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்


தொடர்ந்து கசியும் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 

நாளை நடைபெற உள்ள +2 திருப்புதல் தேர்வுக்கான 
இயற்பியல் , உயிரியல் பாட வினாத்தாள் கசிவு 

வேலூர் பாஜக உறுப்பினரின் மனுவிற்கு அபராதம் விதித்த ஐகோர்ட் 

கோவை 95 ஆவது வார்டில் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராஹிம் 
வழக்கு தொடர்ந்தார் . வழக்கு விவரங்களை மனுவில் தெரிவிக்காததால் இப்ராஹிம் மனுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது ஐகோர்ட் .

நியாய விலை கடைகளில் தகவல் பலகை வைக்க அறிவுரை 

நியாய விலை கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு , வேலை நேரம் போன்றவற்றை மக்கள் அறியும்படி வைக்க அனைத்து ஆட்சியாளர்களும் 
அறிவுறுத்தல் 

திமுக பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் சரண்

சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில்  வியாசர்பாடியை சேர்ந்த அருண் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் 

சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டது 

நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சன்சத் யூடியூப் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதாக தகவல் . மர்ம நபர்களால்
ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சன்சத் டிவி நிர்வாகம் தகவல்.

நீதிமன்ற காவலில் இருந்த விசாரணை கைதி உயிரிழப்பு 

 


34 வயதான விசாரணை கைதி ராஜாமணி  ஆம்பூர் அருகே உள்ள நீதிமன்ற 
காவல் சிறையில் உயிரிழந்தார் . மூச்சுத்திணறல் காரணமாக உயிரழந்தார் என 
தகவல் 

மாட்டுத்தீவன ஊழலில் சிக்கய லாலு பிரசாத் யாதவ்

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு . லாலு பிரசாத் உள்பட்ட 75 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது ஜார்க்கண்ட் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம்

புதுச்சேரியில் மேலும் 68 பேருக்கு கொரோனா 

 


புதுச்சேரியில் மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்  பாதிப்பு 1,65,363 ஆக அதிகரிப்பு 

வினாத்தாள் கசிவு - முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் . அதையடுத்து விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலரான  கிருஷ்ணபிரியா திருவண்ணாமலை மாவட்ட முதன்மைகல்வி அலுவராக நியமனம் செய்யப்ட்டார் 

வீட்டில் வெடி தயாரிப்பின்போது விபத்து - ஒருவர் பலி

உசிலம்பட்டி அருகே வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பின்போது 
ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 

பப்ஜி மதனின் பேச்சு நச்சுத் தன்மை உடையதாக உள்ளது - நீதிமன்றம்


பப்ஜி மதனின் பேச்சு நச்சுத் தன்மை உடையதாக உள்ளது - நீதிமன்றம்


பப்ஜி மதன் மனைவியின் மனு தள்ளுபடி

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 

மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவதெல்லாம் பொய் - எடப்பாடி பழனிசாமி


முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பாருங்கள் என பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின்


உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்...

உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. போர் பதட்டம் காரணமாக உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், உக்ரைனுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை வீரரால் சிக்கலில் சிஎஸ்கே.. மீண்டும் ஐபிஎல் பஞ்சாயத்து

சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராமிற்கு 43 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,738-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 334 ரூபாய் அதிகரித்து 37,904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரேநாளில் 20,409 பேருக்கு கொரோனா தொற்று...

இந்தியாவில் ஒரேநாளில் 20,409 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கனடாவில் போராட்டத்தை ஒடுக்க அவசரநிலை சட்டம் பிரகடனம்...

கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, லாரி ஒட்டுநர்கள் பலரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கினர். கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று முதல் கனடா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கிப் தங்கள் லாரிகளுடன் படையெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இந்தநிலையில், கனடாவில் போராட்டத்தை ஒடுக்க அவசரநிலை சட்டம் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Background

தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த 12 ம் வகுப்பு வணிக கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்கானது.  ஏற்கனவே, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு உயிரியல் வினாத்தாள் வெளியானநிலையில் இன்று மீண்டும் வணிக கணித பாடத்திற்கான தேர்வு வினாத்தாள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.