News Today Live: இன்று மதியம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி - நவ்ஜோத் சிங் சித்து
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
மதியம் 3 மணிக்கு பஞ்சாப் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் சித்து.
முதல்வர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதற்கு, மதிப்பளிக்கும் வகையில் மதியம் 3 மணிக்கு அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.
கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 91.9% பேருக்கு கொரோனா பெருந்தொற்றுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முகாமிட்டிருக்கும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் இன்று பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார்.
முன்னதாக, நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் பேரில் இரண்டு வாரத்துக்கு முன்பு அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 23,529 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன, 28,178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,30,14,898 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் தற்போது 97.85%. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,77,020 ஆகும்.
விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டி, நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 7 இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டிலேயே மாணவ சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், மருத்துவ படிப்பில் புதிதாக 850 இடங்கள் உருவாக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ரூபாய் 12 கோடி செலவில், 200 படுக்கைகள் கொண்ட, தாய் சேய் மையக் கட்டிடத்தை, தருமபுரி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது
ராணுவத்தின் திறனை வலுப்படுத்த 13 ஆயிரத்து 165 கோடி ரூபாயில் ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்களை வாங்க அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்குவங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 30ம் தேதி (இன்று) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஒரிசா மாநிலத்தில் உள்ள பிப்லி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தென் மேற்கு பருவ கற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மேலும், தென்மேற்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்திரகுமாரி 1991-96-ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சமூக நல அமைச்சராக இருந்தபோது, அறக்கட்டளை தொடங்குவதாக கூறி அரசிடம் இருந்து நிதி பெற்று ரூ.15.45 லட்சம் வரை ஊழல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனல்மின் நிலையங்களை மூடுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது. காற்று மாசு காரணமாக இந்திய நகரங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன என்றும் IQ AIR என்கிற அமைப்பு நடத்திய ‘World Air Quality Report 2020’ ன்படி உலகில் காற்று மாசுபாட்டில் மோசமான இடத்தில் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்றும் அந்த அமைப்பு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -