• சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று  வரும் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் அருங்காட்சியகம்  அமைக்கும் பணிகளை அவர் பார்வையிட்டார்.






 



  • அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜகப் போக்கை, திமுக-வினர் இனியாவது நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்தார். 

  • கொரோனா பெருந்தொற்று காரணமாக, இன்றைய தேவர்குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.      

  • தென்மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்யும் -சென்னை வானிலை ஆய்வு மையம்.

  • கனமழை காரணமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருவாரூர்,நெல்லை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு இருப்பது தெரியவந்ததாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

  • மாநிலத்தில் ஒன்பது மாவட்டங்களில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது  பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட 60 நாட்கள் வரை பாதுகாக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்துக்கு,சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

  • முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக  உள்ளதாகவும்,நிலையான வழிகாட்டுதலில்  முறையாக இயக்கப்பட்டு வருவதாகவும், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  


இந்தியா: 



  • உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நேற்று உயிரிழந்தார். 

  • 2024ல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டுமென்றால் 2022ல் உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்தியநாத் பதவியேற்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார். உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ராணுவ கண்காட்சி மையத்தில்  நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

  • மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு (Prelims Exam)  நேற்று வெளியானது.இவற்றை யுபிஎஸ்சி இணையளத்தில் http//www.upsc.gov.in காணலாம் 


உலகம்: 



  • பங்ளாதேஷில் ஆறு மாவட்டங்களில் கடந்த 13-ஆம் தேதி முதல் நடைபெற்ற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்துமாறு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரோம் சென்றடைந்தார்.


விளையாட்டு: 


டி20 உலக கிரிக்கெட் சூப்பர் 12  ஆட்டத்தில் மேற்குவங்க  அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றது.