News Headlines : நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு நலத்திட்டம், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி... மேலும் சில முக்கியச் செய்திகள்
Headlines Today, 5th Nov: இன்றைய தினத்தில் அறியவேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, முதலமைச்சர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னையை அடுத்த தாம்பரம் பெருநகராட்சி, மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்ததையடுத்து தாம்பரம் மாநகராட்சியாக உடனடியாக அமுலுக்கு வருகிறது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதால், புதுச்சேரி அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 7% குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை ரூபாய் 12 முதல் 13 வரை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூபாய் 19 முதல் 20 வரை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார் .
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு உறுதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,895 ஆக குறைந்துள்ளது.
இந்தியா:
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரின், நவ்ஷேரா மாவட்டத்திற்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
விளையாட்டு:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்