Breaking Live: நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்..
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நிலவரங்களின் தகவல்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்..
கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 12 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகை, சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஒமைக்ரான் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். புதியதாக பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடி வருகிறது. பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை என அறிவிப்பு
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறும் சிறுபான்மையினர் மாணவ, மாணவியர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு இணையத்தில் வருகிற 30ஆம் தேதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 12-வது கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது
ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை இடர்பாடு, மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இனியும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வாய்ப்பு இல்லை என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் தமிழ்ச்செல்வன் நண்பர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார் இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26 ஆம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ புகாரை பெற்று விசாரணை நடத்தியதில் வங்கி கணக்கில் 17 லட்ச ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி மீது 120/B, 420 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும்
தென்னாப்பிரிக்கா, ஹாங் காங், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் மும்பை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை (பிசிஆர் ) செய்யப்படும். , அவர்களது மாதிரிகள் கொவிட்-19 பரிசோதனைக்காக எடுக்கப்படுகின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் , அத்தகைய பயணிகள் உடனடியாக நிர்வாகம் கூறும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், இந்த மாதிரிகள் உடனடியாக ஆய்வுக்கு அனுப்பப்பட்டு மரபணு வகைப்படுத்தப்படும் என மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று கடலோர தமிழகத்தில் பரவலாக சற்று மழை குறைந்த நிலையில் இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு தனது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 205 மையங்களில் 25 ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுமக்களிடையே மனந்திறந்து பேசும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 83வது பகுதி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
பிரதமர்நரேந்திரமோடி தலைமையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் பொது சுகாதார ஆயத்தநிலை மற்றும் கோவிட்-19 தடுப்பூசி நிலவரம் குறித்து சுமார் 2 மணி நேரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் முயற்சிகள் மற்றும் நாட்டில் காணப்படும் பல்வேறு வகையான உருமாறிய தொற்று குறித்த கண்ணோட்டமும், பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. சர்வதேச பயணிகள் மற்றும் சமுதாயத்தினரிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை, விதிமுறைகளின்படி மரபணு வகைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன், , INSAGOG நடைமுறையின்கீழ் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் பரிசோதனைக் கூடங்கள் வாயிலாக பரிசோதிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டார். மரபணு வகைப்படுத்தலை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார்.
ஒமைக்ரான்‘ எனப்படும் புதிய வகை உருமாறிய தொற்று பல்வேருய் நாடுகளில் பரவிவருவதை அடுத்து, சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை மறு ஆய்வு செய்ய யோசித்து வருகிறது
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37,218 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.
அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (29-ம் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
Background
முன்னதாக, குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -