Breaking News LIVE : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1733 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு 263, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு 86, ஓபிசி பிரிவு 229, எஸ்சி பிரிவு 122, எஸ்டி பிரிவு 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் 5 முதல் 12ஆம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையும் திறக்கப்படுகின்றன.
விவசாய விரோத ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக 27 ம்தேதி நாடு தழுவிய முழு அடைப்பு தமிழக விவசாயிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என திமுக விவசாய அணி மாநிலத் தலைவர் என்.கே.கே. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு நடந்த கண்ணகி-முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கு - 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ஒரு சவரன் ரூ. 34,856-க்கு விற்பனை
சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு முதல் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை!
கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!
சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆனைப்புளி பெருக்க மரம் மிக பழமையான மரங்களில் ஒன்று
நாடு முழுவதும், இரண்டு தடுப்பூசி டோஸ்கள் போட்டுக் கொண்டு முழுமையான பாதுகாப்பு பெற்றவ்ரகளின் எண்ணிக்கை 21 கோடியைத் தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய வழிகாட்டு விதிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
இந்த வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: "கொரோனாவின் நீண்ட கால பாதிப்புகளை சமாளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க இந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச பக்க விளைவுகள் மற்றும் எதிர்மறை விளைவுகள் இல்லாத சிகிச்சைக்கு செயல்திறனுடன் கூடிய விரிவான சிகிச்சை தேவைப்படுகிறது. கொவிட் சிகிச்சைக்கு அதிக அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு மியூகோமைகோசிஸ் பாதிப்புகள் ஏற்பட்டதை நாம் பார்த்தோம்" என்று தெரிவித்தார்.
Background
Latest Breaking News in Tamil LIVE
நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,01,640 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -