• தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 

  • நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உலாவும்  புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

  • உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை எற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும்  கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை ராகுல் காந்தி இன்று சந்திக்கிறார். 

  • இவ்வாண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளை சேர்ந்த Syukuro Manabe, Klaus Hasselmann, Giorgio Parisi ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியலில்(Physical Systems) சிக்கலான கட்டமைப்புகள் குறித்த விளக்கங்களை அளித்தமைக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

  • அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில்  பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள்,பணவிடைப் படிவங்கள் ஆகியவை தமிழிலும் இருந்தன. ஆனால் இப்பொழுது அவற்றிலிருந்து தமிழ் அகற்றப்பட்டுள்ளது. உடனடியாக இந்தப் படிவங்களில் தமிழ் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

  • நேற்றிரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான அட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  • மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
      

  • கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 209 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,50,886 ஆகும்.   

  • தமிழ்நாட்டில்  பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பிளஸ் டூ  வகுப்பில் வேளாண் தொழில் படிப்பு  படித்தவர்களுக்கான 5% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 


மேலும், வாசிக்க: 


தமிழ்நாட்டில் பேனர்களை தடுக்க விதிகள் வேண்டும் - சென்னை ஐகோர்ட்