Tamil News Headlines Today: 


2021 ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணி மோதின. இதில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. 


CSK vs MI, Match Highlights: ருதுராஜ் ,சாஹர் அசத்தலால் நடப்புச் சாம்பியனை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 


ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நடப்பு தொடருக்கு பின் விலக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இத்தனை ஆண்டுகள் ஆர்சிபி அணியின் கேப்டனாக பல திறமையான வீரர்களை வழி நடத்தி சென்றுள்ளேன். இத்தனை நாட்கள் எனக்கு உறுதுணையாக இருந்த ஆர்சிபி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். இந்த முடிவு எடுக்க சற்று கடினமாக தான் இருந்தது. எனினும் அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். எனினும் நான் முன்பாக கூறியது போல் எப்போதும் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன். என்னுடைய ஓய்வு வரை ஆர்சிபி அணிக்கு மட்டுமே விளையாடுவேன் " எனக் கூறியுள்ளார். 


நேற்று நடைபெற்ற 2-வது மெகா தடுப்பூசி முகாம்களில் 15 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 


தடுப்பூசி தற்போது கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இன்று தடுப்பூசி முகாம்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாவது வரையிலான வகுப்புகள இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. சேலம், பெர்மபலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.




அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.