Breaking News LIVE : கரையைக் கடந்தது குலாப் புயல்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 3ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றது. இந்த முகாமில் ஒரேநாளில் 24,85,814 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது குலாப் புயல்
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1724இல் இருந்து 1,694ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக 1700 ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, இன்று 1700க்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 190 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,490 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 14, 571 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் அது தவறில்லை. மக்கள் நோயின்றி வாழ தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இன்று 7 மணிவரை மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்காக வைத்திருந்த 15 லட்சத்தைக் கடந்தது தடுப்பூசி பணிகள்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘குலாப்’ புயல், ஆந்திராவின் கலிங்கப்பட்டிணத்திற்கும், ஒடிஷாவின் கோபால்பூருக்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் அமெரிக்கப் பயணம், பயனுள்ளதாகவும், விரிவான உயர்மட்ட சந்திப்புகளை கொண்டதாகவும் அமைந்தது என வெளியறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சைபெற வருபவர்கள் ரேஷன் கார்டு கொண்டுவர வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்து பழையபடி இலவச சிகிச்சை முறையே தொடரும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம் என்று மதுரை பாராளுமன்ற எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
3-வது தடுப்பூசி முகாம் நாளான இன்று, கோவை மாநகராட்சி முழுவதும் 196 தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு
இன்று தமிழ்நாடு முழுவதும் 20,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி நிர்வகிக்கப்படுகிறது.
ஆந்திரா/ ஓடிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டது. இது, சூறாவளி புயலாக (குலாப்) உருவாக வாய்ப்புள்ள நிலையில், இன்று மாலைக்குள் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை இது கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 75-85 கி.மீ-ல் இருந்து 95 கி.மீ வரை இருக்கும்.
Background
Latest Breaking News in Tamil LIVE : கடந்த 24 மணி நேரத்தில் 29,616 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,01,442 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.90 சதவீதம் ஆகும். சுமார் 4.15 கோடி (4,15,40,690) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. மேலும் 94 லட்சம் (94,37,525) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம். இப்போது அறிவித்ததுபோல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான்!நீங்கள் உத்தரவிடுங்கள்! உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன் என்றும் கூறினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -