Breaking Live : 15-18 வயசு தடுப்பூசி ஜனவரி 3 முதல் தொடங்கும்: பிரதமர் மோடி
Breaking News LIVE Today Tamil, 25 Dec: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.
மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில், 18 லட்சம் தனிமைப்படுத்தல் படுக்கைகள், 1.4 தீவிர சிகிச்சைப்பிரிவு வசதியுடன் கூடிய படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. நாடு முழுவதும் 3000 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 15முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தம் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் டி.என்.ஏ தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொவிட்-19 மற்றும் ஒமிக்ரான் வகை தொற்றுக்கு எதிரான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.
12 முதல் 18 வயதினருக்கும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி கொடுத்துள்ளது.
ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது .
பிரதமர் - இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 75 எழுத்தாளர்களை தேசிய புத்தக அறக்கட்டளை அறிவித்துள்ளது. ஜே.யு.சுகானா, ஜி.சரவணன், கே.கீதா ஆகிய மூன்று தமிழ் மொழி எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் ஆறு மாத கால வழிகாட்டுதல் பயிற்சி பெறுவார்கள். தேசியப் புத்தக அறக்கட்டளை மூலம் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மற்றும் பிரதித் திருத்த ஆதரவு வழங்கப்படும். எழுத்தாளர்களின் நூல்கள் பின்னர் மற்ற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாதம்தோறும் ரூ.50,000 வீதம் ஆறு மாதங்களுக்கு உதவித்தொகை பெறுவார்கள். மேலும் சிறந்த, வெற்றிகரமான பிரசுரங்களுக்கு 10 சதவீத ராயல்டி தொகையும் வழங்கப்படும்.
கடந்த 24 மணிநேரத்தில் 685 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,99,994 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, வெளிநாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3 பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
முன்னதாக, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசை அமைக்கும் பணிக்காக லண்டன் சென்றிருந்த திரும்பிய நடிகர் வடிவேலுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறியாக கருதப்படும் எஸ் ஜீன் டிராப் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சர்வதேச வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்பதற்காக பவானிதேவிக்கு 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,43,427 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் மற்றும் ஓமிக்ரான பாதிப்பு அதிகரித்து வரும் 10 மாநிலங்களுக்கு பல்துறை நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பு மருந்து குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளுக்கும் இந்தக் குழு அனுப்பப்படுவதாக சுகாதாரத் துறையினர் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மிசோரம், கர்நாடகா, பீனர், உத்தரப்பிரதேசம். ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குச் சென்று இந்தக் குழுவினர் 3 முதல் 5 நாட்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Background
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் செய்தியில்:
“அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சேவை, இரக்கம், பணிவு ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் அளித்துள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், மதிப்புமிக்க போதனைகளையும், நாம் நினைவுகூர்வோம். அனைவரும் ஆரோக்கியத்தோடும், வளமாகவும் இருக்கட்டும். அனைத்து இடங்களிலும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்” என்று பதிவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -