Breaking News LIVE: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Breaking News LIVE in Tamil: தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் கீழே அறிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 17 Nov 2021 08:47 PM
சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கையால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கையால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி - சீமானுக்கு சூர்யா நன்றி


ஓ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


கள்ளக்குறிச்சியில் ஜெய் பீம் பட பணியில் அதிர்ச்சி சம்பவம்...

குறவர் சமூகத்தினர் 5 பேரை சட்டவிரோதமாக காவல்துறை கைது செய்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு 

ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி


தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றதற்காக மன்னியுங்கள் - விடைபெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி


BREAKING | RNR Manohar Passed Away: இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர் (61) மாரடைப்பால் காலமானார்


Jai Bhim Issue | ஜெய் பீம் பட விவகாரம்: பாமக நிர்வாகி மீது வழக்கு!


தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு


6 பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகிறது


பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு


TN Govt Pongal Gift 2022: பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு

பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

TN Govt Pongal Gift 2022: பொங்கலுக்கு 20 பொருட்கள் தொகுப்பு - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கலுக்கு , அரிசி குடும்பத் தாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

BREAKING News Live: நிதி கிடைக்க வாய்ப்பு - டி ஆர் பாலு

கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களை பார்வையிட்ட பிறகு நிதி கிடைக்க வாய்ப்பு - டி ஆர் பாலு

BREAKING News Live: 6 பேர் கொண்ட மத்தியக்குழு

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட 6 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று தமிழ்நாடு புறப்படுகிறது - டி ஆர் பாலு எம்பி

முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்குக - டிஆர் பாலு எம்பி

முதற்கட்டமாக ரூ.550 கோடியை நிவாரண நிதியை வழங்க வேண்டுமென்றும் அமித்ஷாவிடம் டிஆர் பாலு எம்பி வலியுறுத்தல்

மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.2079 கோடி வழங்குக - தமிழக எம்பி கோரிக்கை

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.2079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டிஆர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்

சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டார் நீதிபதி சஞ்சிப் பானர்ஜி

மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.

பிரதமரின் ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பூசியை கொண்டு செல்லும் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர்

கோவிட்19 தடுப்பு மருந்து செலுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். முன்னதாக,நாடு முழுவதும்  தடுப்பூசியை மேலும் எடுத்து செல்வதில் அரசுக்கு உதவும் பல்வேறு பங்குதாரர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று உரையாடினார்.   

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

பெரம்பலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில்,தேனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

பதவி உயர்வு வழங்கப்பட்டு முதல்வராக நியமனம்

பல்வேறு கல்லூரிகளில் பேராசியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு முதல்வராக நியமனம்

37 அரசுக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

37 அரசுக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Chennai Rains: சென்னை மற்றும் புறநகரில் இரவு ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு

வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் போது, இன்று மாலை முதல் கடலோர தமிழகத்தில் படிப்படியாக மழை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் இரவு ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனை செவியியர்களுக்கு அமைச்சர் பரிசு

சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் கடந்த 11-ஆம் தேதி பேரிடர் காலத்தின் போதும், 68 குழந்தைகள் பிறப்புக்கான சிகிச்சையை சிறந்த முறையில் கையாண்ட அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் & செவிலயர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பரிசுகள் வழங்கினார்.

ICFT-UNESCO Gandhi Medal: ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி (ICFT-UNESCO Gandhi Medal) பதக்கத்திற்கான போட்டி - கூழாங்கல் திரைப்படம் பங்கேற்பு

ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி (ICFT-UNESCO Gandhi Medal) பதக்கத்திற்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியலை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா அறிவித்துள்ளது.


இந்த பட்டியலில் தமிழ் திரைப்படமான கூழாங்கல் உள்ளிட்ட 9 படங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:



  • 21ஸ்ட் டிஃபன் (குஜராத்தி)

  • கமிட்மென்ட் ஹஸன் (துருக்கி)

  • கில்லிங் தி இயுனக் கான் (ஃபார்சி, அரபிக்)

  • கூழாங்கல் (தமிழ்)

  • லிங்குய், தி சேக்ரெட் பாண்ட்ஸ் (பிரெஞ்சு, அரபிக்)

  • நைட் ஃபாரஸ்ட் (ஜெர்மன்)

  • நிறையே தத்துகலுள்ள மரம் (மலையாளம்)

  • டோக்யோ ஷேகிங் (பிரெஞ்சு, ஆங்கிலம், ஜப்பான்)

  • வென் பொமேகிரானட்ஸ் ஹவுல் (ஃபார்சி, பஷ்டோ)

Background

Breaking News LIVE in Tamil: 


பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள விரைவுச் சாலையில் 3.2 கிமீ நீளமுள்ள விமானப் பாதையில் விமானக் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். உத்தரப்பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த இணைப்பு அவசியம் என்றும், உ.பி.யின் ஒவ்வொரு மூலையையும் இணைக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.