News Today LIVE : விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ.சி., பதில்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தனது பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்த தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த எஸ்.ஏ.சி., விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாகவும், அது தற்போது செயல்படவில்லை என்றும் கடந்த பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் அது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் எஸ்.ஏ.சி., தரப்பு பதில்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வானார்.
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு
மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஏற்றுமதி 2 ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவகாற்று காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை காணொலி காட்சி மூலம்தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி தற்போது உரையாற்றி வருகிறார்
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையிலான ,ஆயுஷ் மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை, பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை கிண்டியில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்புக்கள் மறியல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முதன்மைக் கோரிக்கையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமல்ல என்று மத்திய அரசு கூறி விட்ட நிலையில், அது குறித்த தமிழ்நாட்டின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை, பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அத்தகையக் கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறி விட்டது. மத்திய அரசின் இந்த முடிவு தவறு என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்றே சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஏற்கனவே அனைத்துக் கட்சிக் குழுவுடன் சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.
சமூகநீதியின் தொட்டில் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்ன? என்பதை நாட்டுக்கும், மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். சமூகநீதியைக் காப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமைப் போரில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு மறுத்திருப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் இன்றைய தவிர்க்க முடியாத தேவை. இதை சாதி சார்ந்து பார்க்கத் தேவையில்லை... வளர்ச்சி சார்ந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் வழியாக நாட்டின் வளர்ச்சிக்கும் இட ஒதுக்கீடு கட்டாயம்; அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கண்டிப்பாகத் தேவை. மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களும், நிகர்நோக்கு நடவடிக்கைகளும் (Affirmative Actions) சரியானவர்களைச் சென்றடையை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படும் புள்ளிவிவரங்கள் தான் அடிப்படையாகும். அதனால் 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அவற்றை சவால்களாக நினைத்து சாதிப்பதன் மூலம் தான் சமூகநீதியை வெற்றி பெறச் செய்ய முடியும். இதற்காக மத்திய அரசுக்கு அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும். 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இம்மாதத் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரலாக மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும், இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதைக் காட்டவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 10 மாதங்களாக மத்திய அரசின் மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறாராம். போராட்டத்தை அடுத்த 10 வருடங்களுக்கு நீட்டிக்கவும் தயாராக இருக்கிறோம் என பாரத் கிசான் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
மத்திய அரசி மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய விவசாயக் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கூடுதல் வரிகளின் மூலமாக ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு (bharat bandh) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக 5 சவரனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட பொது நகை கடன்களை ஆய்வு செய்ய குழு ஒன்றை தமில்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலான் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், " கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, 5 சவரனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், நகை கடன்கள் வழங்கியதில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம். கூட்டுறவு நிறுவனங்களில் நடப்பாண்டு மார்ச், 31 வரையிலான நிலுவை கடன்கள்; ஏப்., 1 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான ஆய்வு குழுவில், கூட்டுறவு சார் பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், நகை மதிப்பீட்டாளர் போன்ற உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்.
இந்த குழுக்கள் ஆய்வு பணியை, நவ., 15க்குள்முடித்து, சரக துணை பதிவாளரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, இருது அறிக்கை நவம்பர் 20க்குள் மண்டல இணை பதிவாளர் வாயிலாக, பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
Background
News Today LIVE :
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கூடுதல் வரிகளின் மூலமாக ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயக் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பு இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு (bharat bandh) விடுத்துள்ளது.
கடந்தண்டு செப்டம்பர் 20ம் தேதி, மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இச்சட்டம் செயலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -