Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 483 பேர் உயிரிழப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 02 Jun 2021 08:26 PM
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 483 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 483 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது - உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

12-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து: குஜராத்

12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்தது.     

மேற்கு மண்டலங்களுக்கு கூடுதலாக தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது- அமைச்சர் சுப்பிரமணியன்

தினந்தோறும் 2000 முதல் 2500 க்கும் மேலாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 


தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஜூன் மாதத்திற்கு என்று மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வரவேற்கின்ற தமிழக சார்பில் 42 லட்சம் தமிழக அரசுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் மத்திய அரசிடம் தடையில்லாமல் வரும் என்று எதிர்பார்க்கிறோம் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படும்,


தொற்றின் அளவு மற்றும் மக்கள் தொகையை வைத்து குறிப்பாக மேற்கு மண்டலங்களுக்கு கூடுதலாகவும் மீதம் உள்ள மாவட்டங்களுக்கு சராசரியாக கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.


தற்போது, வந்துள்ள தடுப்பூசி  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் சம உரிமையோடு அனுப்பப்பட்டுள்ளது. 


மே மாதத்திற்குள் வரவேண்டிய சுமார் 1.75 லட்சம் தோஸ் வர வேண்டியது இருந்தது. ஆனால் அது வரவில்லை. தொடர்ந்து எங்களது செயலாளர் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் பேசினார். முதலமைச்சரும் இது தொடர்புடைய அதிகாரிகளுடன் பேசினார் 


டி.ஆர் பாலு பத்து நாள் டெல்லியில் முகாமிட்டு தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட பல்வேறு வசதிகள் குறித்து மத்திய அரசாங்கத்தின் உயர் அலுவலர்கள்லோடு தொடர்பு கொண்டார்.  அதன் விளைவாக நேற்று ஓர் ஐந்து லட்சம் வந்திருக்கிறது,


தமிழகம் முழுவதும் இன்று தடுப்பூசிகள் காலை முதல் செலுத்த ஆரம்பித்து விட்டது


செங்கல்பட்டு மருந்து தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமானது கட்டப்பட்டு பத்து ஆண்டுகளாக அப்படியே உள்ளது. தற்பொழுது அதை குறித்து பல முறை மத்திய அரசிடம் பேசி உள்ளோம். அதை மத்திய அரசே எடுத்து நடத்த வேண்டும் இல்லாவிட்டால் மாநில அரசிற்கு அந்த உரிமையை அளிக்க வேண்டும்,


நமது மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் சரி ஆக்சிஜன் என்பது எந்த விதத்தில் தட்டுபாடு இல்லை. முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்காக செரியுட்டிகள் கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டது நேற்று இரவு மட்டுமே 20,500 படுகைகள் தமிழகத்தில் காலியாக இருந்தது, எனவே இந்த கொரோன குறித்த அச்சம் பொதுமக்களிடையே குறைந்து வருகிறது" என்று தெரிவித்தார்.  

சிகிச்சை தேவைப்படுவோர் யாரும் காத்திருக்கக் கூடாது - மு.க ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் வள்ளியூரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களைக் காணொலி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  


2-ம் அலையைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, சிகிச்சை தேவைப்படுவோர் யாரும் காத்திருக்கக் கூடாது என்ற முனைப்புடன் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.  

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கக் கூடாது - மத்திய அரசு

5 சதவிகிதத்துக்கும் குறைவாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity rate), தடுப்பூசி திட்டத்தின் கீழ் அதிக பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பயனாளிகளில் 70 சதிவிகித பேருக்கு தடுப்பூசி நிர்வகித்த மாவட்டங்களில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. 



 


மேலும், விவரங்களுக்கு:  Corona Unlock Criteria:70 சதிவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு

18 வயதுக்கு மேற்பட்டவர்களும் மத்திய அரசின் 'இலவச' திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது - எல்.முருகன்

அனேகமாக, ஜூலை - ஆகஸ்ட்டில், இப்போதைய 45+ மட்டுமல்லாமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் மத்திய அரசின் 'இலவச' திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தெரிவித்தார்.   

சென்னை மண்டல வாரியாக கொரோனா பரவல் விவரம்

மாவட்ட ஆட்சியர் சான்றளித்தால், 48 மணி நேரத்தில்  காப்பீடு தொகை கிடைக்கும் - மத்திய அரசு

மாவட்ட ஆட்சியர் சான்றளித்தால், 48 மணி நேரத்தில்  காப்பீடு தொகை கிடைக்கும் வகையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் புதிய முறையை மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின்(PMGKP)  கீழ் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு  கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கியது.  முதலில் 90 நாட்கள் அளவில் இத்திட்டம் இருந்தது. பின்பு ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்பு கடந்த ஏப்ரல் 24ம் தேதி  முதல் இத்திட்டம் மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தில் ரூ. 50 லட்சம் காப்பீடு தொகையாக இருந்தது. சமுதாய சுகாதார ஊழியர்கள் மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து சுகாதாரப்பணியாளர்களுக்கும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும். நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.


 இந்த திட்டத்தின்  கீழ் இழப்பீடு கோரினால், இதற்கான நடைமுறை தாமதமாவதாக மாநிலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் புகார் எழுப்பினர். இந்த தாமத்தை குறைக்கவும், நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி எளிதாக்க புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் ஒவ்வொரு இழப்பீடுக் கோரிக்கைகளும், நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் படி உள்ளதா என   மாநில அரசுகளே மாவட்ட ஆட்சியர்  அளவில் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும்.


மாவட்ட ஆட்சியர் அளிக்கும் சான்றிதழ் அடிப்படையில், காப்பீடு நிறுவனம், காப்பீடு தொகையை 48 மணி நேரத்தில் வழங்கும். இந்த நடைமுறை ஒரே மாதிரியாக இருக்க, மத்திய அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ், ரயில்வே மருத்துமனை ஆகியவற்றில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் குடும்பத்தினர்  இழப்பீடு கோரினாலும், மாவட்ட ஆட்சியரே சான்றளிக்க வேண்டும்" என்று தெரிவித்தது.    


 


  


 

தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் நோயால் பாதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 120 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அறிவிப்பு

கோவிட்-19 தொற்றால் பெற்றோர்களை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

CBSE 12th Exam: நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக்கொள்ள மத்திய அரசு நினைக்கிறது

தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்  

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.


பேறுகால பலன் (திருத்த) சட்டம் 2017 பிரிவு 5(5)-ன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும்,  பிரிவு 5(5) குறித்த விழிப்புணர்வை பெண் பணியாளர்கள் மற்றும் பணி வழங்குவோர் மத்தியில் ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன

திருச்சி மாநகராட்சி - அத்தியாவசிய பொருட்களை குறித்த தகவல்கள்

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் திருச்சி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://trichycorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Madurai Coroanvirus latest news : தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு குழு


மதுரை தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க 6 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அம்மாவாட்ட ஆட்சியர் அமைத்துள்ளார்.  

Trichy Coronavirus News Updates : திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் இன்று தடுப்பூசி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .     


 



 


முன்னதாக, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, தமிழகத்திற்கு மேலும் 4,20,570 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் நேற்று மாலை சென்னை வந்தடைத்து. இந்த தடுப்பூசிகள் நேற்றிரவு மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கும் பணி நடைபெற்றது. 


 

கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு

இந்தியாவில், கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலையில் 594 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டெல்லி, பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 21 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.       


கோழி, இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்க அனுமதி - கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் கோழி, இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவ்வாறு விற்பனை செய்யும் பொருட்களை மாநகராட்சி பகுதியில் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று வழங்கிட அனுமதி அள்ளிக்கபடும் என கோயம்பத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.       

Background

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்,  புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 26,513 ஆக குறைந்தது. 31,673 பேர் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 


தமிழகத்தில், 18 முதல் 44 வயதுடைய 13 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை முதல் டோஸாக செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸாகவும் அதே மருந்தைத் தான் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மருந்தை மாற்றக் கூடாது எனவும், நித்தி ஆயோக் உறுப்பினர்  வி.கே.பால் விளக்கம் அளித்துள்ளார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.