TN Corona Updates: கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கு ஆதார் கட்டாயமல்ல - UIDAI அறிவிப்பு..
கோவாக்சின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய கோவிட்-19 சுரக்ஷா இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது
சென்னையில் 46,366 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 2151 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையிலும், 8354 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையிலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்- 19 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளில் 3793 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பராமரிப்பு மையங்களில் 3200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, சென்னையில் பாதிக்கப்பட்டோரில் 63 சதவிகிதம் பேருக்கு மட்டும் தான் மருத்துவமனை அனுமதி தேவையில்லை என்ற நிலை உள்ளது. 37 சதவிகிதம் பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.
இனி மருத்துவமனைகளுக்கே நேரடியாக ரெம்டெசிவிர்வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
சென்னையில் 13 மண்டலங்களில் கடந்த ஒரு வார கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் அதிகரித்து காணப்படுகிறது. சோழிங்கநல்லூர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் கடந்த 7- நாட்கள் சராசரி பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. மணலி, மாயவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் 7-நாட்கள் சராசரி பாதிப்பு விகிதம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.
திரு வி.க நகர் அதிகமான இறப்பு விகிதங்களை கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னையில் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் 1.3 மடங்காக அதிகரித்துள்ளது.
ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்துவது குறித்தும், மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பாகவும் வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேற்குவங்கம், தமிழ்நாடு , ஆந்திர பிரதேசம், ஓடிசா, பஞ்சாப, அசாம் , ஹிமாச்சல் பிரதேசம் , புதுச்சேரி ஆயா 7 மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் கொரோனா பரவலால் அதிகமான சேதங்களை சந்தித்து வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் தினசரி பாதிப்புகள் பல நாட்களாக குறைய வில்லை.
மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா , உத்தர பிரேதேசம், ஹரியானா , பீகார், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது (அல்லது) உச்சநிலையை கடக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,11,170 பேருக்கு கொரோனா நோய்த் தோற்று கண்டரியப்பட்டது. மேலும், 3,62,437 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்து புதிதாக ஏற்படும் நோய் தொற்று இறங்குமுகமாக உள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,07,95,335 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 84.25 சதவீதமாக உள்ளது.
தமிழக அரசுக்கு கொரோனா நிதி அளித்து வரும் மக்கள் கணக்கு விபரங்களை http://ereceipt.tn.gov.in என்ற இணையத்தில் காணலாம்.
தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பதுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகஅறிவித்துள்ளது.
Congress MP RajeevSatav passes away: காங்கிரஸ் மாநிலங்களைவை உறுப்பினர் ராஜீவ் சத்தவ் கொரோனா நோய்த் தொற்று காரணாமாக உயிரிழந்தார்.
ஏப்ரல் 27 முதல் மே 14 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 10,953 பிராணவாயு செறிவூட்டிகள், 13,169 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 6835 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 4.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது
அறுபது வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நாள்பட்ட நோய்கள் உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் குறித்து முடிவெடுக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான மருந்துகளையும் வீட்டு தனிமையில் உள்ளோர் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று எய்ம்ஸ் புது தில்லியின் மருத்துவர் டாக்டர் நீரஜ் நிஷ்ச்சல் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் மத்திய அரசு தடுப்பூசி வியூகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை என்ற தலைப்பில், " நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்க மத்திய அரசு போடத் தவறியது. இரண்டு இந்திய கம்பெனிகள் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று கணிக்கத் தவறியது.
இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் தடுப்பூசி தயாரித்துத் தர மத்திய அரசு ஆர்டர் தந்த நாள் 11-01-2021. அவர்கள் தங்கள் முயற்சியில் தயாரித்திருந்த தடுப்பூசி இருப்பிலிருந்து தந்தார்கள். அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த ஊக்கமும் தரத் தவறியது. இரண்டு கம்பெனிகளுமே மானியமோ முதலீடோ கடனோ எதிர்பார்த்தார்கள். தடுப்பூசி சப்ளைக்கு மத்திய அரசு முன்பணம் (அட்வான்ஸ்) தந்ததே அன்றி வேறு பணம் தரத் தவறியது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கத் தவறியது. 29-03-2021 அன்று தான் தடை செய்யப்பட்டது. அதற்குள் 5.8 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூன்றாவது தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12-04-2021 அன்று தான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை" என்று ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டார்.
தமிழகத்தில், கடந்த மே 10ம் தேதியில் இருந்து தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்து வந்தாலும், குணவடைவர்களின் எண்ணிக்கையில் மந்த நிலையே காணப்படுகிறது. இதன், காரணமாக தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது.
தேதி | புதிய பாதிப்புகள் | குணமடைந்தவர்களின் எண்ணிக்கை | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
மே - 10 | 28,978 | 20,904 | 8,074 |
மே - 11 | 29,272 | 19,182 | 10,090 |
மே - 12 | 30,355 | 19,508 | 10,847 |
மே - 13 | 30,631 | 19,287 | 11, 344 |
மே -14 | 31,892 | 20,037 | 11,855 |
மே - 15 | 33,659 | 20,905 | 12,754 |
அதாவது, கடந்த ஆறு நாட்களில் மட்டும் கூடுதலாக 60,000 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்(Active Cases). குறைந்த அளவிலான கொரோனா நோயாளிகள் தினமும் குணமடைந்து வருவதால் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்த கொரோனா பெருந்தோற்று காலங்களில், தமிழகம் தனது அதிகபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,658 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இது, தினசரி அதிகபட்ச உட்சமாகும்.
நேற்று மட்டும், ரத்த அழுத்தம், நீரழிவு, சுவாசக் கோளாறு போன்ற எந்த எந்தவித இணை நோய்கள் இல்லாத 75 நோயாளிகள் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்த 75 பேரில், கிட்டத்தட்ட்ட 67 பேர் 60 வயதுகுட்பட்ட நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 45 வயதுக்குட்பட்டவர்கள் 31 பேர் மரணமடைந்துள்ளனர்.
எந்தவித இணை நோய்களும் இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 17,359 ஆக அதிகருத்துள்ளது.
Background
தற்சார்பு இந்தியா 3.0-ன் கீழ், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளின் தயாரிப்பை மேம்படுத்துவதற்காக கோவிட்-19 சுரக்ஷா இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் கோவாக்சின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறன் மேம்படுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்கு 10 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
ஹப்கைன் பயோ பார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் இம்யுனலாஜிக்கல்ஸ் லிமிடெட் - , பாரத் இம்யுனலாஜிக்கல்ஸ் அண்டு பயலஜிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்காக இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை நிதி உதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,53,299 பேர் குணமடைந்துள்ளனர். 3,26,098 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறையாக அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -