Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 1808 பேருக்குக் கொரோனா உறுதி

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

LIVE

Background

தமிழ்நாட்டில் 144219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1808 ஆக உள்ளது. 

Continues below advertisement
20:04 PM (IST)  •  25 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 1808 பேருக்குக் கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1808 ஆக உள்ளது.சென்னையில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  இன்றைய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22. அரசு மருத்துவமனையில் 19 பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

19:05 PM (IST)  •  24 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 1819 பேருக்குக் கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1819 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2583.  சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 24025. 

19:39 PM (IST)  •  23 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 1830 பேருக்குக் கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1830 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

20:30 PM (IST)  •  22 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 1872 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 872  நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,45,584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,872 ஆக உள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  43 ஆயிரத்து 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 133 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 133  ஆக உள்ளது. 

கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,838 ஆக அதிகரித்துள்ளது. 

18:05 PM (IST)  •  22 Jul 2021

ஆந்திராவில் இன்று 1,843 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 23,571 பேர் சிகிச்சை பெற்ரு வருகின்றனர்.

11:55 AM (IST)  •  22 Jul 2021

Chennai Vaccination Report : சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் விவரம்

சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் விபரம்:


11:20 AM (IST)  •  22 Jul 2021

ஆல்ஃபா வகை வைரஸ் 180 நாடுகளில் பரவியுள்ளது - உலக சுகாதார அமைப்பு

பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை வைரஸ் 180 நாடுகளிலும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வகை வைரஸ் 130 நாடுகளிலும், பரவியிருப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

11:14 AM (IST)  •  22 Jul 2021

டெல்டா வகை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது

டெல்டா வகை  கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

11:04 AM (IST)  •  22 Jul 2021

3.20 கோடிக்கும் அதிகமான (3,20,01,490) கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 43.79 கோடிக்கும் அதிகமான (43,79,78,900) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 7,00,000 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட உள்ளன.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 40,59,77,410 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

3.20 கோடிக்கும் அதிகமான (3,20,01,490) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன

10:15 AM (IST)  •  22 Jul 2021

5.42 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு

தமிழகத்திற்கு வந்துள்ள 5.42 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்;-


10:13 AM (IST)  •  22 Jul 2021

India Coronavirus Updates: நாடு முழுவதும் 41,383 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 41,383 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 507 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 4,18,987 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,09,394 ஆக அதிகரித்துள்ளது.