Breaking | பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அமைச்சரிடம் அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மாநிலங்களவையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பான அறிக்கையை வாசிக்க எழுந்தவுடன், நேற்று திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் எழுந்து ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பக்கம் பறக்கவிட்டார். ஆவணங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டதால், மந்திரி தனது அறிக்கையை படிக்க முடியவில்லை, அதற்கு பதிலாக அதன் நகலை சபையின் மேசையில் வைத்தார். எம்.பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
சோதனை நடைபெற்ற இடங்கள் :
* போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாகனங்களில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் வாங்குவதிலும் மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பெற்றுள்ளது என புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
* எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூரில் உள்ள வீடு மற்றும் ரெயின்போ என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனங்களான கல்குவாரிகள் ,சாயப்பட்டறை,மற்றும் அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரான சேகர் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவரது மனைவி சாந்தி பெயரில் உள்ள நிறுவனத்திலும் அதிகாலையிலையே லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
* ஆட்சியில் இருக்கும் போது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அரசு உதவியாளராக இருந்த கார்த்திக் மற்றும் தனி உதவியாளராக இருந்த ரமேஷ் ஆகியோர் வீட்டிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
* அத்துடன் அதிமுக கட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த ஏகாம்பரம், பரமசிவம் உறவினரும் ரியல்எஸ்டேட் புரோக்கருமான சேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு..!
நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 மணி நேரத்திற்கும் மேலாக 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியுள்ளது. மேலும், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி அளவில் பாஜக மாநிலத் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளார்.
செப்டம்பரில் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான முதன்மையான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுக்கும். மத்திய இணை அமைச்சர் முருகன் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமிழ்நாட்டில் மேலும் பல வெற்றிவேல் யாத்திரைகள் நடக்கும்
- ஜே.பி.நட்டா, பாஜக தேசியத் தலைவர்
Background
பெகாசஸ் தொலைபேசி தகவல் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, கடந்த 18 -ம் தேதி இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட தகவல் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -