TN Corona LIVE Updates : கொரோனா தடுப்பூசிக்கான இடைவெளி எவ்வளவு இருக்கலாம்? - மத்திய அரசு தகவல்

TN Corona Cases LIVE Updates : இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம்

ABP NADU Last Updated: 13 May 2021 06:35 PM
நாளை முதல் தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் சட்டப்படி நடவடிக்கை - தமிழக காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நண்பகல் 12 மணி வரை மட்டும் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் தேவையின்றி சிலர் வெளியில் சுற்றுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் அத்தியாவசிய தேதைவகள் இன்றி வெளியில் தேவையில்லாமல் சுற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனா தடுப்பூசிக்கான இடைவெளி எவ்வளவு இருக்கலாம்? - மத்திய அரசு தகவல்

ஹண்டே மருத்துவமனையில் கொரோனா பராமரிப்பு மையம்

சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

மாநில வருவாய் நிதியை அதிகரிக்க நடவடிக்கைத் தேவை: பிரதமருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவைமான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. கவுண்சிலோடு கலந்தாலோசித்து. இந்தப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் (Zero rate) என நிர்ணயிக்க வேண்டும். 


பொருளாதார வளர்ச்சி கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் . 


1. நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.


2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வணி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோணா தொற்றால் பாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி (Adhoc Grants-in-aid) அளிக்கப்பட வேண்டும்.


3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும்.

மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்களை பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட வாய்ப்பு வழங்க வேண்டும் - எடப்பாடி

அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர்.


இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு  மீதமுள்ள சுமார்  600 இளம் மருத்துவர்களுக்கு , உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  கேட்டுக் கொண்டார்.  

30000 பேருக்கு 2 முறைக்கும் சேர்த்து தடுப்பூசி செலுத்த ஒரு கோடி வழங்கத் தயார் - சு.வெங்கடேசன்

மதுரை தொகுதியில் உள்ள இளைஞர்கள் 30000 பேருக்கு 2 முறைக்கும் சேர்த்து தடுப்பூசி செலுத்த எனது 
MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி வழங்கத் தயாராக உள்ளேன்.


ஒன்றிய அரசே, ஒப்புதலை தருக! என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். 


 


   

2 முதல் வயத்துக்குட்பட்டோருக்கு கோவாக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல்

இரண்டு வயதுமுதல் 18 வயத்துக்குட்பட்டோருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவ நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க வேண்டும்.

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க சிபிஐ(எம்) நீலகிரி மாவட்ட செயலாளர்   தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட கடிதத்தில், " நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கி வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பாஸ்டியர் ஆய்வகம் கக்குவான், தொண்டை அடைப்பான் மற்றும் ரணஜன்னி ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசிகளை (DPT Vaccines) தயாரித்து வந்தது. பல்வேறு விலங்குகளின் விஷ முறிவுக்கான மருந்துகளையும் தயாரித்து வந்தது.


குழந்தைகளுக்கு செலுத்தப்படும் போலியோ சொட்டு மருந்துகளின் தரச் சான்று குறித்த பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்தது. மேலும் நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை இந்நிறுவனம்தான் உற்பத்தி செய்து அளித்து வந்தது.   


 



குன்னூர் பாஸ்டியர் ஆய்வகம்


 


இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் இந்நிறுவனத்தை நிரந்தரமாக மூடிவிட்டு செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு பூங்காவிற்கு மாற்ற மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, அப்போது மாநிலத்தில் ஆட்சியிலிருந்த திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மாவட்ட மக்களும் ஒன்றிணைந்து போராடியதன் விளைவாக குன்னூரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி பெறப்பட்டது.


இந்நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக, அரசாங்கம் ஒதுக்கீடு செய்த ரூ 240 கோடி நிதியில், பாஸ்டியர் ஆய்வகத்தின் அனைத்து உற்பத்திப் பிரிவுகளும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதல்கள் மற்றும் வரையறையின் படி மேம்படுத்தப்பட்டு, உற்பத்திக்குத் தேவையான அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ள சூழலிலும், இதுவரை மருந்து உற்பத்தி துவங்கப்படவில்லை.


இந்நிறுவனத்தில் நீண்ட அனுபவம் பெற்ற திறன்வாய்ந்த வல்லுநர்களும் அதிகாரிகளும் பணியாற்றி வருவதோடு மேலும் புதியதாக உயர் கல்வி பயின்ற நூற்றுக்கணக்கான இளைஞர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


எந்த ஒரு தடுப்பூசி மருந்தையும் தயாரிப்பதற்கான முழு திறனையும் பெற்றுள்ள இந்நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான உரிய அனுமதியை (Compulsory Licensing) மத்திய அரசிடமிருந்து பெற்று உடனடியாக தயாரிப்பை துவங்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். 

கோவிஷீல்டு தடுப்பூசி வார இடைவெளியை 12-16 வாரமாக மாற்ற பரிந்துரை

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 6-8 வார இடைவெளியை 12-16 வாரமாக மாற்ற  தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்துள்ளது 


 

எஃகு அலைகளிலிருந்து 4,686 டன் திரவ ஆக்ஸிஜன்

இதுவரை எஃகு அலைகளிலிருந்து 4,686 டன் உயிர் காக்கும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளதாக எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி ஏற்றத்தாழ்வு

அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடு மற்றும் உயர் நடுத்தர வகுப்பு நாடுகள்  இதுவரை 550 கோடி தடுப்பூசி டோஸ்களை சந்தையில் இருந்து வாங்கிக் குவித்துள்ளன 


இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற வளரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் வெறும் 71 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே கொள்முதல் செய்துள்ளன.  


ஆப்ரிக்கா யூனியன் , சிரியா , சோமாலியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் வெறும் 27 கோடி தடுப்பூசி டோஸ்களை மட்டுமே கொள்முதல் செய்துள்ளன.



ஸ்டர்லைட் ஆலையில் இருந்து 4.820 மெட்ரிக் டன்- ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து முதற்கட்டமாக  மருத்துவ பயன்பாட்டுக்காக 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டது.

கடந்த 7 நாட்களில் சுமார் 2,010,084 தினசரி டோஸ் என்ற விகிதத்தில் போடப்பட்டு வருகிறது

இந்தியாவில் குறைந்தது 17 கோடி மக்களுக்கு (173,862,643) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது . கடந்த 7 நாட்களில் சுமார் 2,010,084 தினசரி டோஸ் என்ற விகிதத்தில் போடப்பட்டு வருகிறது. இது, இந்தியாவின் முந்தைய 7 நாள் உட்சபட்ச தடுப்பூசி எண்ணிக்கையை (fastest 7-day pace) விட 44% குறைவாக உள்ளது.

கொரோனா அறிகுறிகள் தென்பாட்டால், தனிமைப்படுத்தி, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்


சென்னையில் இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள பயிற்சி மருத்துவர்கள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ள இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 13.05.2021 (இன்று) மதியம் 02:00 மணிக்குள் gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்தது. 


 



















 

பதவியின் பெயர் 



பதவியிடங்களின் எண்ணிக்கை


 



குறைந்தபட்ச கல்வி தகுதி


 



மாத ஊதியம் (consolidated Pay)


 


சென்னை மாநகராட்சி 

பயிற்சி மருத்துவர்கள் (Trainee Medical Officer)


300அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் இறுதி ஆண்டு MBBS படிக்கும் மாணவர்கள்ரூ.40,000/

 


கூடுதல் விவரங்களுக்கு 91-044-25619330 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

46 நாடுகளில் பி.1.617 உருமாறிய கொரோனா தாக்கம் உள்ளது

இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பி.1.617 என்று அழைக்கப்படும் புதிய வகை உருமாறிய கொரோனாவின் 3 துணை வகைகள் தற்போது  46 நாடுகளுக்கு பரவியுள்ளதாக gisaid என்ற ஆய்வு மையம் தெரிவித்தது.  


உலகளவில் தற்போது  நான்கு உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தி வருகிறது.   இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (B.1.1.7) தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் (B.1.351) , பிரேசிலில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி (P.1) மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி பி.1.617. 







































































CountryTotal #G/452R.V3 (B.1.617+)#G/452R.V3 (B.1.617+) in past 4 weeks%G/452R.V3 (B.1.617+) in past 4 weeks
India1,87623781.4
United Kingdom1,5451,2377.3
USA4572260.6
Singapore15610955.1
Germany103650.4
Australia856340.4
Denmark39110.1
Ireland36262.0
Switzerland32220.6
Italy29271.4

                                                                                           தரவுகள் - GISAID


இந்தியாவில் கடந்த 4 வாரங்கள் கொரோனா வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 237 மாதிரிகள்  பி.1.617 வகையைச் சேர்ந்தவையாக உள்ளது. அதாவது, இந்தியாவில்  பரிசோதனை செய்யப்படும் 100 மாதிரிகளில் 81.4 மாதிரிகள் பி.1.617 வகையாக உள்ளன. இந்தியாவில் கடந்த மார்ச மாத இறுதியில் பி.1.617 கண்டறியப்படும் விகிதம் வெறும் 9  சதவிகிதமாக இருந்தது.  


இங்கிலாந்தில் பி.1.617 மாதிரியின் துணை வகையான இங்கிலாந்து நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் கடந்த 4 வாரங்களில் பி.1.617 துணைவகை மாதிரி கண்டறியப்படும் எண்ணிக்கை 7 சதவிகிதமாக  குறைந்தது. 


 



தரவுகள் - GISAID


      


முன்னதாக,  புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617,  சர்வதேச அளவில் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு முன்னதாக தெரிவித்தது. 

Mucormycosis Amphotericin B drug : நாடு முழுவதும் அம்ஃபோடெரிசின் பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.

Mucormycosis Amphotericin B drug : கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை நோயின் சிகிச்சையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அம்ஃபோடெரிசின் பி (Amphotericin B ) என்ற மருந்தின் தேவை இருப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.   


அம்ஃபோடெரிசின் பி மருந்தின் இறக்குமதியை அதிகரிப்பது, உள்நாட்டில் அதன் உற்பத்தியை பெருக்குவது போன்ற நடவடிக்கைகளில்  மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 


இதற்கிடையே, இந்திய மருந்தகத் துறை கடந்த மே 11ம் தேதி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அம்ஃபோடெரிசின் பி மருந்தை ஒதுக்கியது.  அரசு,  தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார முகமைகளுக்கு இந்த மருந்தை சமமாக விநியோகிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன   

கோயம்பத்தூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை விவரம்

கோயமப்த்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் 


  மிதமான தொற்று உள்ள (Non Critical) நோயாளிகளின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் காப்பீட்டு நிறுவனம் (Insurance Company/TPA) மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்.


தீவிர தொற்று (Critical) உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15000/- வீதம் காப்பீட்டு நிறுவனம் (Insurance Company/TPA) மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  

Background

புதிதாக கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கிய நிதியை கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்று 65 சிவில் சொசைட்டி அமைப்புகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.  


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் 1,50,000  ஆக்சிகேர் கருவிகளை ரூ. 322.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்)  அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை அடிப்படையாகக்கொண்ட பிராணவாயு விநியோக முறையான ஆக்சிகேர், எஸ்பிஓ2 அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பிராணவாயுவை முறைப்படுத்தும் கருவியாகும்.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் 1,50,000  ஆக்சிகேர் கருவிகளை ரூ. 322.5 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது.  பெங்களூருவில் அமைந்துள்ள டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ள இந்த தானியங்கி ஆக்ஸிஜன்  விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும்.


குறைவான எஸ்பிஓ2 அளவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளின் போது தானியங்கி முறையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். ஆக்சிகேர் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பிராணவாயு சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களின் சிறந்த செயல்திறனால் பிராண வாயுவின் பயன்பாடு 30-40% குறைகிறது. இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொரோனா  சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.   


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.