TN Corona LIVE Updates: இந்தியாவில் இன்று மட்டும் புதிதாக 4,00,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
TN Corona Cases LIVE Updates: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசும், மருத்துவமனைகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை பல இடங்களில் ஆக்ஸிஜன் இல்லாமல் மரணங்கள் நிகழ்வதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பான முழு விபரம் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் இயங்கும் மனித உரிமை அமைப்பான யுனைடெட் சீக்ஸ், புது டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறுதி காரியங்களை நடத்தமுடியாத நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு துணை நின்று உதவி புரிகிறது. அவ்வமைப்பின் இயக்குநர் ப்ரீத்தம் சிங், “350 உடல்களுக்கு இதுவரை இறுதி காரியங்கள் நிறைவேற்றப்பட்டது. சாதி மத பேதமின்றி அனைத்து குடும்பங்களுடன் இவ்வமைப்பு துணை நிற்கிறது. மனிதர்களுக்கு துணை நிற்கிறோம்” என்று கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் 14 முதல் 15 இறுதி காரியங்களை செயல்படுத்துகிறார்கள் இவ்வமைப்பினர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முதன்முறையாக 4 லட்சத்துக்கும் அதிகாமன புதியதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 4,01,993 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,91,64,969 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்திருந்தது.
இதுவரை இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,11,853 ஆக உள்ளது.
தற்போது, நாட்டில் கொரோனா பாதித்தோர் 32,68,710 நபர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,99,988 நபர்கள் குணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, ஏப்ரல் 30 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,83,37,385 என பதிவாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி டோஸ்களின் மொத்த அளவு 15,49,89,635 கோடிக்கு மேல் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Background
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 18ஆம் தேதி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதற்காக ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் கோவின் தளத்தில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று முதல் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றன.
இந்தியாவில் இன்று மட்டும் புதிதாக 4,00,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -