Breaking Live : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கோவிட் 2ம் அலை மரணங்கள் குறித்து விரிவாக செய்தி வெளியிட்ட Dainik Bhaskar செய்தி நிறுவனத்தில் தற்போது வருமான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் காந்தி சிலைக்கு முன் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
கமல்ஹாசன் ட்வீட்: தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய சகோதரருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.ஏ புரம் சாய்பாபா கோயில் அருகே சாய் அப்பார்ட்மெண்ட்டில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் வழங்கப்பட்ட 220 ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என்றும், சி.ஏ.ஜி. அறிக்கையில் கூட டெண்டர்கள் தொடர்பான முறைகேடுகளை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது என்று நீதிமனறத்தில் தமிழக அரசு நேற்று தெரிவித்தது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டசபை தேர்தல் காரணமாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில், இந்த புகார் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாகவும், அதில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று முதல்வர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடர்பான 21 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு அதிதாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை சோதனையை ஒட்டி எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
விஜயபாஸ்கர் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு புகாரையடுத்து 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Background
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இறுதிகட்டத்தை எட்டுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடையும் வரை ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் அமைதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -