இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டு ஹிந்தி மொழி மட்டும் இடம்பெற்றுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடசேன் கடிதம் எழுதியுள்ளார்.




வழக்கமாக இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ், ஆங்கிலம் என அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றிருக்கும். இதனால் இந்தியா முழுவதிலும் அந்தந்த மாநில மக்கள் அவர்களுக்கு ஏற்ற மொழியை தேர்வு செய்து முன்பதிவு செய்துக் கொள்வார்கள். ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரியாத மக்களுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் தற்போது இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி இடம்பெறாமல், ஹிந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 






இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெஙடேசன், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ” இன்டேன் தானியங்கி சமையல் எரி வாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். சமையல் எரிவாயு வேண்டுமென்றால் இந்தி கற்றுக்கொண்டு வா என்று மக்களை துரத்துவது போல உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா? விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா? மீண்டும் இண்டேன் சமையல் எரிவாயு தானி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும்” என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார். தமிழ் மொழி நீக்கப்பட்டதால் பொது மக்கள் முன்பதிவு செய்ய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பலரும் தெரிவித்துள்ளனர். 


Earthquake: குறைந்தது 128 பேர் உயிரிழப்பு.. உடலை நடுங்க வைத்த நேபாள் நிலநடுக்கம்.. மேலும் அதிகரிக்க வாய்ப்பு!


Electoral Bonds : "அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குறது தொழில் நிறுவனங்களோட வேல இல்ல" உச்சநீதிமன்றம் காட்டம்