நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறும்போது, "இன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ பணம் வாங்கினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று கூறியுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழித்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது” எனத் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் மற்றும் லஞ்சம் இந்திய நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.