ஸ்வாரா பாஸ்கர் விரைவில் 'ஜஹான் சார் யார்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்ற உள்ளார். கடைசியாக, 'வீரே தி வெட்டிங்' என்ற அவரின் திரைப்படம் திரையரங்கில் வெளியானது.






இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பாலிவுட்டின் சரிவு குறித்து பேசி உள்ளார் ஸ்வாரா பாஸ்கர். மேலும், அதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.


பாலிவுட் படங்கள் வெற்றி பெறாததன் காரணங்கள் குறித்து பேசிய அவர், நாட்டின் பொருளாதார மந்தநிலையே இதற்கு காரணம் எனக் கூறினார். திரையரங்குகளில் காட்சிகள் சரியாக ஓடாததற்கு பாலிவுட் பொறுப்பாகும் என்பது உண்மையல்ல என்றும் அவர் கூறினார். பார்க்கும் அனுபவத்தை  OTT சீர்குலைத்ததாக அவர் குற்றம் சாட்டினார். 


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சோகமான மரணத்திற்குப் பிறகு பாலிவுட் மீது வெறுப்பை பரப்புவதே தற்போதைய போக்கு என்றும் ஸ்வாரா மனம் திறந்து பேசியுள்ளார். 


பாலிவுட்டின் தற்போதைய நிலையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், "இது ஒரு வித்தியாசமான ஒப்பீடு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் ராகுல் காந்தியை நினைவுபடுத்துகிறேன். எல்லோரும் அவரை பப்பு என்று அழைத்தார்கள். எனவே இப்போது எல்லோரும் அதை நம்புகிறார்கள். நான் அவரைச் சந்தித்து இருக்கிறேன். அவர் முற்றிலும் மபுத்திசாலி. தெளிவான மனிதர். பாலிவுட்டிலும் இந்த 'பப்புஃபிகேஷன்' நடந்துள்ளது" என்றார்.






ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா, மைஹர் விஜ் மற்றும் பூஜா சோப்ரா ஆகியோர் 'ஜஹான் சார் யார்' படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 22 அன்று வெளியிடப்பட்டது. செப்டம்பர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


ஸ்வரா, தனுஷுடன் ராஞ்சனா என்னும் பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது