கொரோனா வைரஸை அடுத்தடுத்து இப்போது புதிய வகை நோரோ வைரஸ், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள 13 மாணவர்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்திய அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து பேசிய அமைச்சர், “நோரோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். குடிநீரை சுத்தமான முறையில் பருக வேண்டியதும் அவசியமாகிறது. முறையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இந்த நோயை விரைவாக குணப்படுத்த முடியும்” என தெரிவித்திருக்கிறார்.
நோய் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? - கேரள அரசு வெளியிட்டுள்ள செய்தி விவரம்
- நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். சுடு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்
- கழிவறை பயன்படுத்திய பிறகு, உணவு சாப்பிடுவதற்கு முன்பு சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவ வேண்டும்.
- விலங்குகளோடு தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
- பழங்களை நன்கு கழுவிய பின்பு பயன்படுத்த வேண்டும். கடல் உணவுகளை நன்கு சமைத்த பின்பே உட்கொள்ள வேண்டும்.
நோரோ வைரஸ் அறிகுறிகள்:
வயிற்றுப் பகுதியில் அசவுக்கிரியமாக உணர்தல். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். நோரோ வைரஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தாக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
நோரோ வைரஸ் வரலாறு:
இந்த நோய் முதன்முதலில் 1929-ம் ஆண்டு கண்டறியப்பட்டு மக்கள் இதை 'வாந்தி நோய்' என்று பெயரிட்டிருந்தனர். ஆனால், 1968-ம் ஆண்டு முதல் நோரோ வைரஸ் உயிருக்கு ஆபத்தான நோயாக வகைப்படுத்தப்பட்டது. 1990-களுக்கு பிறகு இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் அப்டேட்:
கேரளாவில் இன்று:
தமிழ்நாட்டில் இன்று:
தமிழ்நாட்டில் இன்று 1,02,154 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 812 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 114 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 927 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்