தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. 

Continues below advertisement

கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் நிலவிய கடுமையான காற்று மாசுபாட்டால் 3 குழந்தைகள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்படி சுத்தமான காற்றை சுவாசிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை கடமை என்றும், பண்டிகை காலங்களில் வெடிக்கப்படும் பட்டாசுகள் இந்த உரிமையைப் பட்டாசுகள் பறிப்பதாகவும் தெரிவித்து பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. 

Continues below advertisement

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி உச்சநீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுப்பது வழக்கம். அப்படியாக இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது பேசிய நீதிபதிகள், “ பட்டாசு பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிப்பது தீபாவளி கொண்டாடும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என்பதால் அதனை தாங்கள் ஏற்கவில்லை” என தெரிவித்தனர். அதேசமயம், “நாள் முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதை அனுமதிக்க மாட்டோம்.  நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிப்பது, முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட மற்ற அனைத்து உயிரினங்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தீர்வை நாம் காண வேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக டெல்லியைத் தனிமைப்படுத்தக் கூடாது. காலநிலை போன்ற காரணங்கள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற விசாரணைகளின்போது சில வகை பட்டாசுகள் தொடர்பாக பகுதி தளர்வு அளிப்பது சாத்தியமா என்பது குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்  பதிலை நீதிமன்றம் கோரியிருந்தது. குறிப்பாக பேரியம் அடிப்படையிலான பட்டாசுகளின் பயன்பாடு குறித்த அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டிஉர்ந்தது. ஆனால் வெளிப்புறச் சோதனைகள் இன்னும் நடத்தப்படவில்லை என்பதால் அக்டோபர் 15ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி தெரிவித்துள்ளார். 

இதனிடையே ஒரே திரியால் ஒன்றாக இணைக்கப்பட்டு தொடர்ச்சியாக வெடிக்கும் பட்டாசு ரகமான சரம் தயாரிப்பதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.