ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்குக்கான கட்டண வசூலில் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 


ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து சவுதி அரேபிய நாட்டில் உள்ள இஸ்லாமியர்க்ளைன் புனிதத் தளமான  ஹஜ்க்கு ஏராளமான இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது  2020 முதல் 2022 வரை கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான எண்ணிகையில் மட்டும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதுவும் சவுதி அரேபியாவினைச் சேர்ந்தவர்களை மட்டுமே  இனி எதிர்வரும் 2023-ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரிடம், வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து ஜிஎஸ்டிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என தனியார் சுற்றுலா ஏஜெண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இன்று இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹஜ் பயணம் மேற்கொள்ளுபவர்களிடம் வசூலிக்கும் கட்டணங்களில் இருந்து ஜிஎஸ்டிக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது.






தனியார் சுற்றுலா ஏஜென்சிகள் அளித்த மனுவை, ஏற்கனவே கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், இரு தரப்பு வாதங்களையும் விசாரித்து வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இன்று (ஜூலை, 26)  பின்வரும் தீர்ப்பினை நீதிபதி வழங்கினார். “ ஏஜென்சிகள் தங்கள் மனுவில்  கோரியுள்ள் வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு ஆகிய இரண்டும் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு, 245ன் படி வெளிநாட்டு  நடவடிக்கைகளுக்கு இந்திய வரிச்சட்டம் பொருந்தாது. மேலும், இந்திய அரசு ஏற்கனவே ஹஜ் கமிட்டி மூலம்  புனித யாத்திரை மேற்கொள்வோருக்காக வரிவிலக்கு அளிப்பதால், தனியாக தனியார் ஏஜென்சிக்ளுக்கு வழங்க முடியாது” எனவும் தெரிவித்துள்ளது. 


கொரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமது அளிக்கப்படவில்லை. இந்தாண்டு முதல் அனுமதி வழங்கப்படவிருப்பதால் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.