தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்பொழுது, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 


மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்படமுடியாது என்றும், அமைச்சரவைக்கு எதிராக ஆளுநர் தனிப்பட்ட கருத்து எதையும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளனை ஏன் விடுவிக்க முடியாது என்று மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அவர் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண