Preamble Verdict: அரசியலமைப்பில் மதச்சார்பற்ற வார்த்தையை நீக்குங்க; வழக்கு போட்ட சு.சுவாமி: அதிரடியில் உச்சநீதிமன்றம்

Secular: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் , மதச்சார்பற்ற, சமவுடைமை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய வார்த்தைகள் 1976 ஆம் ஆண்டு சட்டத்திருத்தில் சேர்க்கப்பட்டது.

Continues below advertisement

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள சமவுடைமை, மதச்சார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு ஆகிய சொற்களை நீக்க கோரிய  மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Continues below advertisement

42வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்:

1976 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசாங்கத்தால் 42 வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்திருத்தின் கீழ் "சமத்துவம்", "மதச்சார்பற்ற" மற்றும் "ஒருமைப்பாடு"  ( Socialist, Secular, Integrity ) என்ற  சொற்கள் அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்டன. .

மனு தாக்கல்:

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யுமான சுப்ரமணியன் சுவாமி மற்றும் வழக்கறிஞர் அஷ்வினி உப்தயாய் ஆகியோர், 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' வார்த்தைகளை முகப்புரையில் இருந்து நீக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். 
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வானது விசாரித்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. 

தள்ளுபடி:

இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதாவது “  சரத்து 368 கீழ் அரசியலமைப்பின் முகப்புரை வரை, நாடாளுமன்றத்திற்கு திருத்தும் செய்யும் அதிகாரம் உள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தொடரப்பட்ட இந்த வழக்கின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார் தலைமை நீதிபதி.

இதையடுத்து இந்த மனுக்கள் மீது கூடுதல் விசாரணை தேவையில்லை என்றும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

Continues below advertisement