சுபாஷ் சந்திர போஷ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், மரணலித்திருக்கும் சந்தேகம், இன்று வரை தொடர்ந்து வருகிறது


1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள மாநிலத்தில் பிறந்த சுபாஷ் சந்திர போஸ், தனது 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவற பாதையில் செல்ல விரும்பினார். பின்னர், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையின் வேண்டுகோளை ஏற்று, 1915 ஆண்டு கொல்கத்தா மாநில கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆங்கில வரலாற்று ஆசிரியர் ஓட்டனுடனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.1917 ஆம் ஆண்டு இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.


குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி:




பின் 1920-ல் இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்க கூடாது என, தனது பதவியை ஏற்க மறுத்திவிட்டார். 1921 ஆம் ஆண்டு இந்திய திரும்பிய பின் காந்தியை சந்தித்தார். பின் சி.ஆர் தாஸுடன் சேர்ந்து பாணியாற்ற தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு ஆங்கிலேய இளவரசர்  வேல்ஸ் இந்தியாவுக்கு வருகையையொட்டி சுபாஷ் உள்ளிட்ட பலரும்  கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.


காந்தியுடன் விரிசல்


ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போது, போராட்டத்தை காந்தி பாதியில் நிறுத்தியதால் சித்தரஞ்சன் தாஸ், போஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் புதிதாக சுயாட்சி கட்சியை தாஸ் உருவாக்கினார். ஜாலியன் வாலாபாக படுகொலைக்கு தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரை உத்தம் சிங் கொன்றதற்கு, காந்தி கண்டித்தார், ஆனால் இனப்படுகொலையை பாராட்டி சுபாஷ் சந்திர  போஸ் கடிதம் அனுப்பினார். இச்சம்பவம் காந்தி மற்றும் போஸ் இடையே இருந்து விரிசலை அதிகபடுத்தியது.


காந்தியுடனான மோதல் போக்கு அதிகரித்ததை தொடர்ந்து போசும் நேரும் இணைந்து விடுதலை சங்கம் என்ற இயக்கத்தை நடத்தினர். மேலும் பார்வர்ட் என்னும்  இதழில் விடுதலை உணர்ச்சிகள் குறித்து எழுத ஆரம்பித்தார். பின் சில காலங்களுக்கு பின் சுயராஜ்ஜிய கட்சியை காங்கிரசுடன் இணைத்து பிரச்னைகளை காந்தி முடித்து வைத்தார்,


இரண்டாம் உலக போர்:


இரண்டாவது உலகப் போரின் போது, இந்திய மக்களின் ஒத்துழைப்பை பிரித்தானிய அரசு கோரியது, ஆனால் நேதாஜி பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டார். முதல் உலகப்போரில் பிரித்தானியாவுக்கு பின்னடைவை ஏற்பட்டதை தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு எதிரான நாடுகளை ஒன்று திரட்டி இந்தியாவை விடுவிக்க நினைத்தார். அதற்கு சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என கருதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.




சுபாஷுக்கு ஏதேனும் ஏற்பட்டால் , பெரும் விளைவுகள் வரும் என அஞ்சி ஆங்கிலேய அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட பின் 1941 ஜனவரி 15 ஆம்  நாள் மாற்று வேடத்தில் வெளி விட்டு தப்பி சென்றார். ஜெர்மனியில் உள்ள ஹிட்லரை சந்தித்தார். அப்போது ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி கொடுத்தார்.


வெளி நாடுகளிலிருந்து உதவி:




பின் ஜப்பான் சென்று, உதவியை பெற்றார். பின் ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய ராணுவத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு  கொண்டு வந்தார். பின்னர் சிங்கப்பூர் சென்று  1943 ஆம் ஆண்டில் பர்மா வழியாக படையைத் திரட்டி வந்தார். அப்போது ஆங்கிலேயர்களின் தாக்கியதில் கொத்து கொத்தாக இந்தியர்கள் சாய்ந்தனர். மேலும் ஜப்பான சரணடைந்ததால் போரை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு போஸ் தள்ளப்பட்டார்.  


பின் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி போஸ் தைவானில், விமான விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் தைவானில் அன்று விமான விபத்து ஏதும் நடக்கவில்லை என தைவான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இந்திய ஆவணங்கள் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி விமான விபத்தில் இறந்ததாக தெரிவிக்கிறது. ஆனாலும் இன்று வரை சுபாஷ் சந்திர் போஷின் மரணம் மர்மமாகவே உள்ளது.


எல். முருகன் ட்வீட்:


இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ட்விட்டர் பதிவில், சுபாஷ் சந்திர போஷின் தியாகத்தை நினைவு கூறுவோம் என பதிவிட்டுள்ளார்.