கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழக்கத்தில் நடைபெற்ற தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாணவர்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் மூச்சுத் திணறல் பாதிப்புக்காக களமச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கழக மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தது கேரளா மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 






பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகி நிகிதா காந்தி தலைமையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் உயிரிழந்த மாணவர்களில் இருவர் பெண்கள் என்றும் இரண்டு பேர் ஆண்கள் என்றும் கேரளா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வினா ஜார்ஜ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 


காயமடைந்தவர்களில் 46 பேர் களமச்சேரியில் உள்ள மருத்துவமனைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் தனி வார்டில் வைத்து கவனிக்கப்படுகின்றனர் என எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.கே உமேஷ் ஊடகங்களிடத்தில் தெரிவித்துள்ளார். 


வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி என்பது, கேட்பாஸ் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை பெய்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், வெளியில் காத்திருந்தவர்கள் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழ்ந்துள்ளனர். 


குசாட்டில் 'திஷ்னா என்ற வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது நாளான இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.