கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


இதுவரை இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் இயந்திரங்கள் மூலம் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நூற்றாண்டின் கடந்த ரயில் விபத்துகளில் இதுவே மிக மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்தில் சிக்கிய பயணிகளை சென்னை கொண்டு வர சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கட்டமாக 250 பேர் ரயில் மற்றும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் சென்னைக்கு விமானம் மூலம் வந்த (ரயிலில் பயணம் மேற்கொண்ட) மாணவி ராஜலட்சுமி இந்த விபத்து தொடர்பாக கூறுகையில், மாலை 7 மணி அளவில் விபத்து நடைபெற்றதாக கூறிப்பிட்டார். மேலும், பி8 பேட்டியில் பயணம் மேற்கொண்டதாக கூறினார். பி8 பெட்டியில் அதிக பாதிப்பு இல்லை என்றாலும் பி6 பெட்டிவரை கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். தவறான சிக்னலினால் இந்த விபத்து ஏற்பட்டதா என தெரியவில்லை என கூறியுள்ளார். குளிரூட்டப்பட்ட பெட்டி மட்டுமால்லாமல் சாதரண பெட்டிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 நிமிடங்களில் சம்பவ இடத்தில் அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். பொரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்றும் 20 – 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறினார்.