நடிகர்களாக இருந்தாலும் சரி , இயக்குநர்களாக இருந்தாலும் சரி மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும் என்று சோனு சூட் கருத்து தெரிவித்திருக்கிறார்


அஜய் தேவ்கனின் ட்விட்டர் பதிவுக்கு பிறகு ,  இந்தியாவின் தேசிய மொழி என்ன என்பது குறித்து திரை பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதமே கிளம்பியுள்ளது.


 இந்த நிலையில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர் சோனு சூட் , பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  “இந்தி மட்டுமே தேசிய மொழி என கூற முடியாது. இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான மொழி என்றால் அது பொழுதுபோக்குதான். நீங்கள் எந்த மொழியை சேர்ந்த நடிகராக இருந்தாலும் மக்களை ரசிக்க வைத்தால் அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்கள், நேசிப்பார்கள் , கவுரவிப்பார்கள் . நடிகர்களாக இருந்தாலும் சரி , இயக்குநர்களாக இருந்தாலும் சரி மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள வேண்டும்.உங்களது எண்ணங்களை விடுங்கள் . உங்கள் எண்ணத்தை விட்டு விடுங்கள்  என்று சொல்லும் நாட்கள் போய்விட்டன.


மக்கள் தங்கள் மனதை விட்டு விலகி ஒரு சராசரி படத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்ட மாட்டார்கள். எப்போதும் ஒரு நல்ல சினிமா மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார். KGF 2, RRR மற்றும் புஷ்பாவின் வெற்றி குறித்து பேசிய சோனு சூட், ” பாக்ஸ் ஆஃபிஸில் அந்த படங்களின் வெற்றி , வழக்கமான இந்தி படங்கள் எடுக்கும் முறையை மாற்றும் என தெரிவித்துள்ளார்.







அண்மையில் நடந்த நிகச்சி ஒன்றில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், ‘இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழியாக முடியாது’ எனப் பேசியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த அஜய் தேவ்கன், ‘எனது சகோதரா, இந்திதான் எப்போதும் நம் தேசிய மொழி அதனை மாற்ற முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.  


இந்நிலையில் ட்விட்டர் வாசிகள் சிலர் “நமக்கு தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது”, “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன், எங்களுக்கு இந்தி தேசிய மொழி கிடையாது”,”நான் வங்காள மகாராஷ்டிரியர்கள் பிரிவைச் சேர்ந்தவள் அஜய் தேவ்கன் சார். எனக்கு இந்தி தேசிய மொழி இல்லை, கிச்சா சுதீப் சொல்வது சரி” என தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்