பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு கொரோனா

கடந்தாண்டு ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிய பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சோனு சூட். இந்தியா முழுவதும் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் நடந்தே தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.

Continues below advertisement

அப்போது, நடிகர் சோனு சூட் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்களை தன்னுடைய சொந்த செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு ரயில்களிலும், விமானங்களிலும் அனுப்பி வைத்தார். இதுதவிர, கொரோனா காலத்தில் பணமாகவும், பொருளாகவும் இந்தியா முழுவதும் பலருக்கும் சோனு சூட் உதவினார்.

அவரது செயலலைப் பாராட்டி சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்தன. பஞ்சாப்பில் இருந்து மும்பை வந்த விமானத்தில் சோனு சூட் உருவப்படம் பொறிக்கப்பட்டு, அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிவருகிறது. இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">🙏 <a >pic.twitter.com/2kHlByCCqh</a></p>&mdash; sonu sood (@SonuSood) <a >April 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த சூழலில், நடிகர் சோனு சூட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். கவலைப்பட வேண்டாம். இது உங்கள பிரச்சினைகளை தீர்க்க எனக்கு போதுமான நேரம் தருகிறது. உங்களுடன்தான் நான் எப்போதும் இருக்கிறேன் என நினைவில் கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் சோனு சூட் கள்ளழகர், ராஜா, சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி உள்பட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  

Continues below advertisement