‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

Continues below advertisement

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக நேற்று மட்டும் இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,17,353 ஆக இருந்தது. அத்துடன் நேற்று ஒரே நாளில்  கொரோனா தொற்று காரணமாக  1,185 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மகாராஷ்டிரா,கேரளா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 

Continues below advertisement

 

இந்தியாவின் மொத்த தொற்று பாதிப்பில் சுமார் 67.16 சதவிகிதம் பாதிப்பு இந்த மாநிலங்களில் இருந்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசு நோய் தொற்று பரவலை தடுக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பல மாநிலங்கள் தங்களின் தேவைக்காக ஆக்சிஜன் மற்றும் ரெம்டேசிவிர் ஆகியவற்றை மத்திய அரசிடம் கேட்டு வருகின்றன. 


 

இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்கத்தில் இருப்பதால் அவர் டெல்லி வந்த பிறகு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் உத்தவ் தாக்கரேயின் இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமர் அலுவலகம் இன்னும் பதில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




முன்னதாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான மக்களின் சந்தேகங்களை தீர்க்க மத்திய மாநில அரசுகள் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசின் உதவி எண்கள் 1075 மற்றும் 91-11-23978046. தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு உதவ 044-29510500 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு கொரோனா தொற்று தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். 



Continues below advertisement
Sponsored Links by Taboola