மருத்துவமனையில் அனுமதி:


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நலமுடன் உள்ளார்:


சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நலமுடன் உள்ளதாகவும், சோனியா காந்தி மீது அன்பும் அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்று:


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். இதையடுத்து அவரது மகள் ப்ரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறி தென்பட்டதால், அவரும் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


பிரார்த்தனை:


சோனியா காந்தி மிக விரைவில் குணமைடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனையும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.














மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண