காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 






இலேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 76 வயதான சோனியா காந்தி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்றிருந்தார்.  இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் சோனியா காந்தி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.