கேரளாவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதாநாயர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சரிதா நாயர் கடந்த 2015ம் ஆண்டு கொட்டாரக்கரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பல் அவரது காரை வழிமறித்தது மட்டுமின்றி, காரை தாக்கியதுடன் அவரையும் தாக்க முயன்றுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக சரிதாநாயர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜாரானர்.
நீதிமன்றத்தில் ஆஜரான அவர் கூறியதாவது, “ எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்றது. இதனால், என்னுடைய உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு நான் தற்போது வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல்நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை வெளியிடுவேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
சரிதா நாயர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி, சரிதா நாயர் கேரளாவின் முன்னாள் முதல்வர் காங்கிரசைச் சேர்ந்த .உம்மன்சாண்டி மற்றும் அப்போதைய அமைச்சர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியது அப்போது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சரிதா நாயர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும், தன்னை கொல்ல முயன்றவர்களை விரைவில் வெளி உலகிற்கு அறிவிப்பேன் என்றும் கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முக்கிய செய்திகள் படிக்க : Konica Layak: தொடரும் தற்கொலைகள்.. ஒரே விளையாட்டில் திறன் பெற்ற 4 இளம் வீரர்கள் மரணம்..
மேலும் படிக்க : எஸ்.பி.யாக பணியாற்றிய ஒடிசாவிற்கு 27 ஆண்டுகளுக்கு பின் டி.ஜி.பி.யாக திரும்பும் ஐ.பி.எஸ். அதிகாரி!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்