பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை போலீஸார் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளனர்.






பவானிபூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தனது சகோதரர் அரவிந்த் மிஸ்ராவின் (38) இறுதிச் சடங்குகளில் கோவிந்த் மிஷாரா (22) கலந்து கொண்டார்.


பாம்பு கடித்ததில் இவரும் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ராதா ராமன் சிங் கூறுகையில், "தூங்கி கொண்டிருந்த போது, பாம்பு கடித்து கோவிந்த் மிஷ்ரா உயிரிழந்தார். அதே வீட்டில் இருந்த உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டே (22) என்பவரையும் பாம்பு கடித்துள்ளது.


பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோவிந்த் மிஷ்ரா மற்றும் சந்திரசேகர் பாண்டே இருவரும் அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள லூதியானாவில் இருந்து கிராமத்திற்கு வந்தனர்.


இக்கிராமத்தை மூத்த மருத்துவ மற்றும் நிர்வாக அலுவலர்கள் வியாழக்கிழமை பார்வையிட்டனர். உள்ளூர் எம்எல்ஏ கைலாஷ் நாத் சுக்லா இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.






எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் அலுவலர்களை சுக்லா கேட்டுக் கொண்டுள்ளார். பொதுவாக, படத்தில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். ஆனால், தற்போது நிஜத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாம்பு கடித்த இறந்தவரை பார்க்க வந்த உறவினர் பாம்பு கடித்து இறந்திருப்பது அக்கிராமத்தினரை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண