Shocking Video : தெலங்கானாவில்  அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் காலை தரதரவென இழுத்து செல்லும் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று தான்.


தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நோயாளி:


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மார்ச் 31ஆம் தேதியில் இருந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மார்ச் 31 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட இவர், அடுத்த நாள் காலை வரை சுயநினைவின்றி இருந்தார்.


இதனால் மருத்துவர்கள் அவரை வேறு வார்டுக்கு மாற்ற அறிவுறுத்தினர். பின்னர், நீண்ட நேரமாக வெளிநோயாளிகள் காத்திருக்கும் இடத்தில் இருந்த அவர்கள், சிறிது நேரம் கழித்து நோயாளியை அவரது பெற்றோர்கள் தரதரவென இழுத்துச் சென்றனர். இரண்டாவது மாடிக்கு செல்வதற்காக லிப்ட்  இருக்கும் இடத்திற்கு அவரது பெற்றோர்கள் இழுத்துச் சென்றனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.






பெற்றோர்கள்:


இதுபற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரதிமா ராஜ் கூறுகையில், ”மருத்துவமனையின் பெயரை கெடுக்கும் வகையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நாற்காலி இல்லை என்று கூறுவது தவறானது. இதுபோன்று சூழ்நிலை இங்கு இல்லை. பொதுமான அளவில் அனைத்து வசதிகளும் மருத்துவனையில் உள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியை இழுத்துச் செல்லவில்லை. அவரது பெற்றோர்கள் தான் இழுத்து சென்றுள்ளனர்” என்று கூறினார்.