பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சுரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. அந்தக் கோயில் வளாகத்திற்கு வெளியே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை சுட்டார். அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அந்தக் கோயில் வளாகத்திற்கு வெளியே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை சுட்டார். அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கும்பலில் இருந்து ஒரு நபர் கைத்துப்பாக்கியால் சுதிர் சுரி மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர் உள்ளூர் கடைக்காரர் ஆவார்.
போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தோம். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை ஆணையர் அருண் பால் சிங் தெரிவித்தார்.
துப்பாக்கியால் சுட்ட நபருடன் காரில் வந்த மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். சுரி, தேர்தலில் போட்டியிட விரும்ப மாட்டார். ஆனால், அவர் சில சீக்கிய அமைப்புகளையும், காலிஸ்தான் ஆதரவாளர்களையும் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றுவார்.
இதுவும் கொலையின் பின்னணியில் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், போலீஸார் விசாரணை முடிந்த பிறகுதான் இதுகுறித்து முழுமையான தகவல் தெரியும்.
அமிர்தசரஸ் நகரில் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பு பேஸ்புக்கில் ஒரு மணி நேரம் வரை லைவில் இருந்தார் சுரி. அவர் அமிர்தசரஸ் பொற்கோயில் நிர்வாகத்தை விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
சில மாதங்களுக்கு முன் பஞ்சாபில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரபல பஞ்சாபி பாடகர் மூஸ்வாலா. இவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் தீபக் . இவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் கொலையில் தொடர்புடையவர்கள் என 15 பேர் பட்டியலிடப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். இவரை புரொடக்ஷன் வாரண்டின் பேரில் அவரை டெல்லி போலீசார் பஞ்சாப் அழைத்து வந்தனர்.
மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சி.ஐ.ஏ.) பணியாளர் ஒருவர் அவரை இரவு 11 மணியளவில் கபுர்தலா சிறையில் இருந்து மான்சாவுக்கு தனது தனி வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.