Delhi Air Pollution: வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம்.. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஆஃபர்

டெல்லியில் காற்று மாசு காரணமாக 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

Continues below advertisement

டெல்லியில் காற்று மாசு காரணமாக 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு மிக அதிகமாக இருக்கிறது. மாசுவைக் கட்டுப்படுத்த சிறப்புப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உடன் மாசு சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. காற்று மாசு நிலைமை சற்று சீரடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. மாசு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லியில் நாளை முதல் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு அவுட்டோர் ஆக்டிவிட்டிஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயிர் பல்வகைப்படுத்தலுக்கும் முயற்சி செய்து வருகிறோம். பஞ்சாபில் விவசாயிகளை அரிசியில் இருந்து பிற பயிர்களுக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்கிறோம். புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், இடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ரயில்வே சேவைகள், மெட்ரோ, விமான நிலையங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசுத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்கு தடை இல்லை.

மற்ற இடங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கட்டடத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும். காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரவிந்த் கெஜரிவால் தெரிவித்தார்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

கொரோா தொற்றுக்கு பிறகு வீட்டில் இருந்தபடியே வேலை என்ற முறை உலகமெங்கும் அறிமுகமானது. அதற்கு முன்பு தேவைக்கருதி மட்டுமே வீட்டில் இருந்தபடியே வேலை முறை இருந்தது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்திலும், அதன் பிறகும் பல முன்னணி நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை கொடுக்க முன்வந்தது.

காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது: 

காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது

உலகிலேயே காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது டெல்லி. உலகிலேயே அதிக மாசடைந்த இடமாக இந்தியாவின் கங்கை சமவெளி கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதியில் வாழும் சுமார் 50 கோடி மக்கள் இதே மாசுபட்ட சூழலில் வாழ்ந்தால் சராசரியாக தங்கள் ஆயுளில் இருந்து சுமார் 7.6 ஆண்டுளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம் மூலமாக 1.5 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சுமார் 1.8 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும் கூறப்பட்டிருந்த நிலையில், இவற்றை விட ஆபத்தான ஒன்றாக மாறியிருக்கிறது காற்றுமாசு.  உலகிலேயே அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தை வங்காளதேசம் பிடித்துள்ளது. 
 

Continues below advertisement