மும்பை, தானே, புனே மற்றும் பிற நகரங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு பிடித்த எண்ணான 1 ஐப் பெறுவதற்கு ₹6 லட்சம் செலுத்த வேண்டும் என்று மாநில போக்குவரத்துத் துறையின் வரைவு அறிவிப்பு முன்மொழிந்துள்ளது


0001 போன்ற விஐபி பதிவு எண்களுக்கான கட்டணத்தை 50% உயர்த்த மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை முன்மொழிந்துள்ளது. இந்த விஐபி எண்ணுக்கான தற்போதைய விலை நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹3 லட்சமாகவும், மகாராஷ்டிரா முழுவதும் இரு சக்கர வாகனங்களுக்கு ₹50,000 ஆகவும் உள்ளது.இந்த நிலையில் ராய்காட், ஔரங்காபாத், நாக்பூர், கோலாப்பூர் மற்றும் நாசிக் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்த எண்ணின் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, கார் வாகன உரிமையாளர்கள் இந்த எண்ணுக்கு ₹6 லட்சம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள், 5 லட்சம் செலுத்த வேண்டும் என செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த ஃபேன்ஸி நம்பர் பிளேட்டிற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் 1 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.




பொதுவாகவே போக்குவரத்துத் துறையிடம் 200க்கும் மேற்பட்ட விஐபி எண்கள் இருக்கும்,  வாகன உரிமையாளர்கள் இந்த எண்களில் ஒன்றைப் பயன்படுத்த விரும்பினால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதனை பெற வேண்டும் என்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது, ​​மாநிலம் முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்கள் தங்களின் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு இந்த எண்களைப் பெற முறையே ₹1.50 லட்சம் மற்றும் ₹20,000 முன்பணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய அறிவிப்பில்  ஃபேன்ஸி எண்களை வாங்க விரும்புவர்கள்  முன்பு இருந்த தொகையை விட மூன்று மடங்கு உயர்வு இருக்கும் என்று வரைவு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.




இந்த நிலையில் பாப்புளாரிட்டியை அடிப்படையாக கொண்டு எண்கள் ஏழு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை, தானே, ராய்காட், புனே, ஔரங்காபாத், நாக்பூர், கோலாப்பூர் மற்றும் நாசிக் மாவட்டங்களில் 0001 எண்கள் மிகவும் விரும்பப்படுகின்றன. இரண்டாவது வகை எண்களில் 0009, 0099, 0786, 0999 மற்றும் 9999 ஆகியவை அடங்கும். . இந்த எண்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பதிவுத் தொடரை வாகன உரிமையாளர் பயன்படுத்த விரும்பினால் முன்பை விட கூடுதல் தொகையை செலுத்த வேண்டும். மும்பை, தானே, புனே மற்றும் பிற நகரங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு பிடித்த எண்ணான 1 ஐப் பெறுவதற்கு ₹6 லட்சம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள், 5 லட்சம் செலுத்த வேண்டும் என செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் முன்மொழியப்பட்ட கட்டணக் கட்டமைப்பிற்கு குடிமக்கள் தங்களின்  பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என அம்மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.